கொழும்பு, பொரளை, சீவலிப் பகுதியிலுள்ள 3 மாடிக் கட்டிடத்தொகுதி ஒன்றின் முதல் மாடியில் இன்று காலை திடீரென தீ பரவியுள்ளது.

பொலிஸாருக்கும் தீயணைப்பு பிரிவினருக்கும் வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் மின்சார சபையினரின் உதவியோடு முதாலம் மாடியில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்;த சம்பவத்தில் இதுவரை எதுவித உயிர் ஆபத்துக்களும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ பரவலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.