இராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் :  ஞானசார தேரர்

Published By: Priyatharshan

23 Sep, 2017 | 12:29 PM
image

கடந்த காலத்தில் எமது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கொன்று கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அளித்த சாட்சியத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அப்போதைய ஹோமாகம மஜிஸ்திரேட் நீதிவானாக கடமையாற்றிய ரங்க திசாநாயக்க ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சாட்சியமளித்த ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்றபோதும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தான் உதவியுள்ளதாக கூறிய அவர், பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக அவர் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு ஆதரவு அளித்து வந்ததாகத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகோடா காணாமல் போனது தொடர்ப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சில முக்கிய இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளை பொலிஸார் கைது செய்ததாக குற்றம்சாட்டிய ஞானசார தேரர், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலதிக வழக்கு விசாரணை அடுத்த மாதம் முன்றாம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 17:21:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01