ஹட்டன், மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பாதையோரமிருந்த பாதுகாப்பு கல்லில் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா வைத்தியசாலையிலிருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.