வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட திணைக்களங்களில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா பிரதேச செயலகத்திலோ அல்லது தொலைபேசியூடாகவோ தெரிவிக்க முடியும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

“வவுனியாவில் வெளிக்கள உத்தியோகத்தர்களாக பணியாற்றும் அரச ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளாது வெளிக்களப்பணிகளுக்காக செல்வதாக மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு வேறு தொழில்களில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் எமக்கு கிடைத்த வண்ணம் உள்ளது.

பொதுமக்களுக்கு சேவை புரிவதற்கே வெளிக்கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்;த உத்தியோகத்தர்கள் கிராமங்களில் தமது பணிகளை சிறப்பாக மெற்கொள்ளவில்லை என எமக்கு பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் குறித்த வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள தயாராக உள்ளோம்.

முறைப்பாடுகள் தொடர்பாக எனது அலுவலக தொலைபேசி இலக்கமான 0242222202ற்கு அல்லது மேலதிக பிரதேச செயலாளரது தொலைபேசி இலக்கமான 0242222236ற்கு எது வித தயக்கங்களுமின்றி அழைத்து முறைப்பாடு செய்யுங்கள்.

மேலும் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பெட்டியில் தங்களது முறைப்பாடுகளை எழுத்து மூலமாக எழுதி போடவும் முடியும்” என தெரிவித்தார்.