இலங்­கையில் “மத்­திய அரசின்” பலம் சிங்­க­ள­வர்­க­ளான பெரும்­பான்மை இனத்­திடம் உள்­ளது என்­பதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நிரா­க­ரிக்க முடி­யாது என மஹிந்த அணி ஆத­ரவு எம்.பி.யான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

ஒற்­றை­யாட்­சிக்குள் நாடு பிள­வு­படும் என்ற கூட்­ட­மைப்பின் “வாதத்தை” ஏற்றுக் கொள்ள முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. மேலும் தெரி­விக்­கையில்;

இலங்­கையில் பெரும்­பான்மை இனம் சிங்­கள மக்கள். அதே­வேளை மத்­திய அரசின் பலமும் சிங்­கள மக்­க­ளி­டமே உள்­ளது. இதனை தமிழ்த் தேசிக் கூட்­ட­மைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதே­வேளை ஒற்­றை­யாட்­சியில் நாடு பிள­வு­படும் என்­ப­தையும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. இதற்கு சிறந்த உதா­ரணம் இந்­தியா போன்ற நாடாகும். இங்கு ஒற்­றை­யாட்­சிக்குள் தான் அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தி­யாவில் மாநி­லங்­க­ளுக்கு அதிக அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. திட்­ட­மிடல், தேசிய கொள்­கைகள் போன்ற முக்­கிய அதி­கா­ரங்கள் மத்­திய அர­சி­டமே இருக்கும். ஏனைய அதி­கா­ரங்கள் மாநி­லங்­க­ளுக்கு வழங்­கப்­படும். இதே­போன்றே இங்கும் அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­படும். எனவே நாடு பிள­வு­படும் என்­பதில் உண்­மை­யில்லை.

அத்­தோடு மத்­திய அரசின் அதி­கா­ர­முள்ள பெரும்­பான்மை இனம் இரண்டு மூன்று அணி­க­ளாக செயல்­படும் நிலை இருக்கும். இதன்­போது கூட்­ட­மைப்பு ஏதா­வது ஒரு அணி­யுடன் இணைந்து செயற்­பட முடியும்.

தற்­போது கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதைப் போன்று செயற்படலாம். அதேபோன்று கூட்டமைப்புக்குள்ளும் அணிகள் தோன்றலாம் என்றார்.