நாட்டில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்கும் பொருட்டு புதிய செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை நில மீட்பு மற்றும் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக திடீர் வெள்ள அனர்த்தங்களால் பொருள் மற்றும் உயிர்ச்சேதங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு, வெள்ள மற்றும் கழிவு நீரை முறையாக அகற்றுவதற்குப் போதுமான வசதிகள் இல்லாததே காரணம் என மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் கழிவு நீர் இறைக்கும் நிலையங்கள் பலவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், முதலாவது கழிவு நீரிறைக்கும் நிலையத்தை பேலியகொடையில் அமைக்கவும் இலங்கை நில மீட்பு மற்றும் முகாமைத்துவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.