உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும்  ஒக்­டோபர் மாதம்  நேபா­ளத்­துக்கு  பய­ணிக்­க­வுள்ளார். 

நேபாள ஜனா­தி­பதி  விடுத்­துள்ள  அழைப்பை ஏற்றே   ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன நேபா­ளத்­துக்கு  பய­ணிக்­க­வுள்ளார். 

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்கா வந்­துள்ள  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  நேற்று  நேபாள பிர­தமர் சர்பஹதுர் டியு­பாவை சந்­தித்து   பேச்சுவார்த்தை நடத்­தி­ய­போதே   இந்த தக­வலை ‍வெ ளியிட்டார். 

இதன்­போது இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு  உறவைவலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த் தைகளில்  ஜனாதிபதி  ஈடுபடவுள்ளார்.