ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­தினால் ஒப்­பந்த அடிப்­ப­டையில் 2013 ஆம் ஆண்டு எட்டு ஏ 350 எயார் பஸ் விமா­னங்கள் குத்­தகை அடிப்­ப­டையில் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டன. இந்­நி­லையில் இ­வற்றில் நான்கு எயார் பஸ் விம­ானங்­க­ளுக்­கான தயா­ரிப்­புகள் நிறுத்­தப்­பட்­ட­மை­யினால் எமக்கு 115 பில்­லியன் டொலர் செலுத்த வேண்டி ஏற்­பட்­டது. அடுத்த நான்கு எயார் பஸ் விமான தயா­ரிப்பு நட­வ­டிக்­கைகள் இம்­மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அதற்கு முன்னர் அர­சாங்கம் தலை­யிட்டு உட­ன­டி­யாக தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களை நிறுத்த வேண்டும்.இல்­லையேல் பாரிய நஷ்­ட­ஈட்டு தொகையை செலுத்த வேண்டி ஏற்­படும் என கோப் குழுவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுனில் ஹந்­து­நெத்தி சபையில் தெரி­வித்தார்.

ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் நாடு­க­ளுக்கு அர­சாங்கம் தமது தீர்­மா­னத்தை அறி­விக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை விசேட கூற்றை வெளி­யிட்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­தினை நேற்று முன் தினம் கோப் குழு­வுக்கு அழைத்தோம். இதன்­படி குறித்த நிறு­வ­னத்­தினால் ஒப்­பந்த அடிப்­ப­டையில் 2013 ஆம் ஆண்டு எட்டு ஏ 350 எயார் பஸ் விமா­னங்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் பரீ­சி­லனை செய்­யப்­பட்டு வரு­கின்­றது. என்­றாலும் பெறப்­பட்ட எட்டு விமா­னங்­களில் நான்கு எயார் பஸ் விம­னாங்கள் தயா­ரிப்பு நட­வ­டிக்­கைகள்  நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக  115 பில்­லியன் டொலர் நஷ்ட ஈடு இலங்கை செலுத்­தி­யுள்­ளது. எனவே இது தொடர்­பிலும் விசா­ரணை செய்­ய­வுள்ளோம்.

இந்­நி­லையில் அடுத்த நான்கு எயார் பஸ் விமான தயா­ரிப்­புக்­கான  நட­வ­டிக்­கைகள் இம்­மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. ஆகையால் அர­சாங்கம் குறித்த நான்கு எயார் பஸ் தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிப்­பதா? இல்­லையா? என்­பது குறித்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்­பது எமக்கு தெரி­யாது.  

எவ்­வா­றா­யினும் நான்கு எயார் பஸ்­க­ளுக்­கான தயா­ரிப்பு நட­வ­டிக்­கைகள் இம்­மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. எனவே குறித்த எயார் பஸ்­களை தயா­ரிக்க முன்னர் அதற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும். 

இல்­லையேல் பாரி­ய­ளவில் நஷ்­ட­ஈ­டுகள் செலுத்த வேண்டி வரும் . எனவே ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் நாடு­க­ளுக்கு அர­சாங்கம் தமது தீர்­மா­னத்தை அறி­விக்க வேண்டும் என்றார்.

இதன்­போது இடை­ந­டுவே எழுந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல,

கோப் குழு­வுக்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு அழுத்தம் பிர­யோகம் செய்ய முடி­யாது. கணக்­காய்­வாளர் நாய­கத்தை தவிர வேறு யாருக்கும் பதில் கூற வேண்­டி­ய­தில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சுனில் ஹந்­து­நெத்­திக்கு கேள்வி எழுப்ப முடியும். ஆனால் கோப் குழுவின் தலைவர் என்ற வகையில் உத்­த­ரவு பிறப்­பிக்க முடி­யாது என்றார்.

இதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன எழுந்து குறிப்பிடுகையில்,இல்லை. சுனில் ஹந்துநெத்தி கூறுவதில் உண்மை தன்மை உள்ளது. குறித்த நடவடிக்கைகள் தயாரிப்பதற்கு முன்னர் குறித்த ஒப்பந்ததை நிறுத்தினால் நஷ்ட ஈடு செலுத்த வேண்டியிருக்காது எனறார்.