அர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்'

Published By: Priyatharshan

23 Sep, 2017 | 09:43 AM
image

மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் ஒரு ''புன்­னகை பொய்யர்'' என சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட மேல­திக சொலி­சிட் டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா வர்­ணித் தார்.

அத்­துடன் அர் ஜுன மகேந்­தி­ரனை பொய்­யாக உரை­யா டக் கூடி­யவர் என வர்­ணித்த அவர் அவ­ரது சாட்­சி­யத்தில் பல விட­யங்கள் மறைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறினார். சாட்சி குறுக்கு விசா­ர­ணை­களின் இடை நடுவே அர்­ஜுன மகேந்­திரன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவே­ராவின் கேள்­வி­க­ளுக்கு சிரித்­த­வாறு (சற்று அலட்­சியப் போக்கில்) பதில் அளித்துக் கொண்­டி­ருந்த போது கடும் தொணியில் சாட்சிக் கூண்டை நோக்கி அவர் இதனைத் தெரி­வித்தார்.

நேற்று வழமை போன்று முற்­பகல் 10.00 மணிக்கு ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில்  நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

இதன்­போது சட்ட மா அதிபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை குறுக்கு கேள்­வி­க­ளுக்கு உட்­ப­டுத்­தினார்.

அந்த கேள்­விகள் கேட்­கப்­படும் முன்னர் ஆணைக் குழு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னதும், சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் யசந்த கோதா­கொட மன்றில் சிறப்பு அறி­வித்தல் ஒன்­றினை விடுத்தார்.

கடந்த புதன் அன்று ஆணைக் குழு விசா­ர­ணைகள் இடம்­பெற்ற போது, அர்­ஜுன மகேந்­தி­ரனின் சட்­டத்­த­ர­ணி­யான ஜன­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, அர்­ஜுன மாகேந்­தி­ரனை குறுக்கு விசா­ரணை செய்ய கால அவ­காசம் கோரு­வது, பொது­மக்­களின் வரிப் பணத்தை வீணாக்கும் செயல் என சாட­லாக கருத்­து­ரைந்­தி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளிக்கும் வண்ணம் யசந்த கோதா­கொ­டவின் அறி­வித்தல் அமைந்­தி­ருந்­தது. தாம் பொது மக்கள் வரிப் பணத்தில் சம்­பளம் பெறு­வ­தா­லேயே உண்­மையை வெளிக்­கொண்­டு­வர சிர­மப்­ப­டு­வ­தா­கவும், ஜன­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஸ் டி சில்­வாவின்  கூற்று அவ­தூ­றா­னது  எனவும் அவர் சுட்­டிக்­காட்டி இரு பக்க அறி­வித்தல் ஒன்­றினை விடுத்தார்.

இத­னை­ய­டுத்து ஆணைக் குழுவின் நீதி­ய­ர­ச­ரான பிர­சன்ன ஜய­வர்­தன, கடந்த 7 மாதங்­க­ளாக சட்ட மா அதிபர் திணைக்­களம் சார்பில் தமக்கு கிடைக்கும் ஒத்­து­ழைப்பு பாராட்­டத்­தக்­கது எனவும் அதனை தாம் மிக கெள­ர­வமா மதிப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

இதனைத் தொடர்ந்து அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம் குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா, 26.02.2015 ஆம் திகதி  காலை மத்­திய வங்­கியில் நடைப் பெற்ற ஒரு சந்­திப்பு தொடர்பில் கடிதம் ஒன்றை மையப்­ப­டுத்தி  குறுக்கு விசா­ரணை செய்தார்.

இதன்­போது முன்­னைய சாட்­சி­யா­ளர்­க­ளையும் மையப்­ப­டுத்தி கேள்­வி­களை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா முன்­வைத்தார்.இதன்­போது சிரித்­த­வாறே அர்­ஜுன மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் கோபம் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா,

இது ஒன்றும் நகைச் சுவை அல்ல. ஏன் சிரிக்கின்றீர். நீர் ஒரு புன்னகை பொய்யர். நீர் பொய்யாகவே உரையாடக் கூடியவர் என தொடர்ச்சியாக அர்ஜுன மகேந்திரனை ஒரு பொய்யர் என வர்ணித்தவாறு குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09