தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர பொலிஸ் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் எண்ணிக்கை வீதியில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிகமாக தெற்கு அதிவேக வீதிக்கு அண்மித்த பிரதேசங்களிலும் பொலிஸ் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனம் தொடர்பான பதில் பொலிஸ்மா அதிபர் அமரசிரி தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதியின் 21 ஆவது மைற்கல்லுக்கு அண்மையில் இருவர் வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களை வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் 6 வாகனங்கள் இதன் காரணமாக சேதமடைந்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.