மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்தல் திருத்­தச்­சட்ட மூலத்­தி­னூ­டாக தொடர்ந்தும் தேர்­தலை கால­தா­ம­தப்­ப­டுத்­து­வ­தற்கே அர­சாங்கம் முனை­கின்­றது. நான்கு மாதத்தில் தேர்தல் என்­பது பிர­த­மரின் வாக்­கு­று­தியே தவிர அது எழுத்­து­மூல அறி­விப்பு அல்ல என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்வெல தெரி­வித்தார்.

தேங்காய் விலைகள் அதி­க­ரித்து விட்­ட­தென கேள்வி எழுப்­புவோர்  அடுத்த தேர்தல் எப்­போது என்ற வினா­வி­னையும் அர­சாங்­கத்­திடம் தொடுக்க வேண்டும் இந்த சட்­ட­மூ­லத்­திற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாத சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­திற்கு

 நெருக்­கடி ஏற்­பட்­டி­ருந்­த­போது மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் இதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை மக்­க­ளுக்கு செய்த பாரிய துரோ­க­மாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­னியின் தலை­மை­ய­கத்தில் நேற்று வெ ள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மகாண சபை­க­ளுக்­கான தேர்தல் திருத்­தச்­சட்ட மூலத்­தித்­தினை நிறை­வேற்­றி­யதன் மூலம் அர­சாங்கம் தொடர்ந்தும் தேர்­தலை கால­தா­ம­தப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பாட்­டி­னையே முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

ஒரே­த­ட­வையில் தேர்­தலை நடத்தும் வகையில் 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மூ­லத்­தினை அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருந்­தது. அந்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மானால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்று உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. 

இத­னை­ய­டுத்து இந்தத் திருத்­தத்தை கைவிட்­டி­ருந்த அர­சாங்கம் ஏற்­கெ­னவே மாகாண சபை தேர்­தலில் பெண்­களின் பங்­க­ளிப்பை 30 வீத­மாக அதி­க­ரிக்கும் திருத்தச் சட்­ட­மூலம் ஒன்றை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

குறிப்­பாக அர­சாங்கம் பெண்­களின் பங்­க­ளிப்பை 30 வீத­மாக அதி­க­ரிப்­ப­தாக பகி­ரங்­க­மாக அறி­வித்­தாலும் அதன் பின்­ன­னியில் தேர்­தலை காலந்­தாழ்த்­து­வ­தற்­கான பல சரத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் திருத்தச் சட்­ட­மூ­லத்தில் மேலும் திருத்­தங்­களைச் செய்து அதனை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­தது. இதற்­கி­ணங்க கடந்த புதன்­கி­ழமை மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் மாகாண சபை உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. பிற்­பகல் 1.30 மணிக்கு மீண்டும் சபை கூடி சட்­ட­மூலம் மீதான விவாதம் இடம்­பெற்­றது.

இதே­வேளை இந்த திருத்தச் சட்­ட­மூ­லத்தில் மாகாண சபை தேர்­தலை 60 வீதம் தொகு­தி­வாரி அடிப்­ப­டை­யிலும் 40 வீதம் விகி­தா­சார முறை­மை­யிலும் நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இதற்கு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் கடும் எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தன. 

50 வீதம் தொகு­தி­வாரி அடிப்­ப­டை­யிலும் 50 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் அடிப்­ப­டையில் தேர்தல் திருத்தம் இடம்­பெற வேண்டும் என்று இந்தக் கட்­சி­களின் தலை­வர்கள் கோரி­யி­ருந்­த­தனர். இவ்­வா­றான சூழ்­நி­லையில் அன்று மாலை 6.30 மணி­ய­ளவில் வாக்­கெ­டுப்பு நடை­பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. இதன்­போது இந்தச் சட்­ட­மூலம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என சட்­டமா அதிபர் அறி­வு­றுத்­தி­ய­தா­கவும் எனவே மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் இதனை நிறை­வேற்ற வேண்டும் என்றும் சபா­நா­யகர் அறி­வித்தார்.

இந்­நி­லையில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று கூட்­டுக்­கட்சி உறுப்­பி­னர்­களின் வாக்­குகள் இல்­லாது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாத சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­பட்­டி­ருந்த போது மக்கள் விடு­தலை முன்­ன­னி­யினர் இந்த சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை மக்­க­ளுக்கு செய்த பாரிய துரோக செய­லாகும்.

சைட்­டத்­திற்கு எதி­ரா­கவும் விவ­சா­யிக ளுக்கு ஆத­ர­வா­கவும் வெளியில் கருத்­துக்­களை வெளி­யிடும் மக்கள் விடு­தலை முன்­ன­னி­யினர் மக்­க­ளுக்­காக சிந்­தித்து அந்த சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருந்தால் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை குறித்த சட்­ட­மூ­லத்­திற்கு கிடைத்­தி­ருக்க வாய்ப்­பில்லை.

எனவே இல­கு­வாக அதனை தோற்­ற­க­டித்­தி­ருக்க முடியும். இந்த விட­யத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­னியின் செயற்­பா­டா­னது அதி­ருப்­தி­ய­ளிக்­கின்­றது. 

தேர்­தல்கள் கால­தா­ம­தப்­ப­டுப்­ப­டாது என்றும் நான்கு மாதத்தில் மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்ணயம் செய்யப்படும் என்றும் பிரதமர் தெரிவித்திருப்பது வெறும் வாக்குறுதியேயன்றி குறித்த தேர்தல் நான்கு மாத்தில் நடக்கும் என எவ்வித எழுத்து மூலமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எனவே இவ்விடயம் தொடர்பில் மக்களும் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி அரசாங்கத்திடம் கேள்வி கேட்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் குறித்தும் தேங்காய்களின் விலை அதிகரித்து விட்டது எனவும் கேள்வி எழுப்புவோர் அடுத்த தேர்தல் எப்போது என்ற வினாவினையும் அரசாங்கத்திடம் தொடுக்க வேண்டும் என்றார்.