கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய மாகாண­ச­பை­களின் பத­விக்­காலம் முடி­வ­டைந்­த­வு டன் அந்த சபை­களின் நிர்­வாகம், ஆளு­நர்­களின் கட்­டுப்­பாட்டில் வரும் என்று உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறி­வித்­துள்­ளது. இந்த மூன்று மாகா­ணங்­க­ளுக்கும் மார்ச் மாதத்­துக்குள் தேர்தல் நடத்­தப்­படும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மூன்று மாகா­ண­ச­பை­களின் பத­விக்­காலம் இம்­மாத இறு­திக்குள் முடி­வ­டை­கின்­றது.சப்­ர­க­மு­வவின் ஆட்­சிக்­காலம்  எதிர்­வரும் 27 ஆம் திக­தியும் வட­மத்­திய மற்றும் கிழக்கு மாகாண சபை­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் 30 ஆம் திக­தியும் முடி­வுக்கு வரு­கின்­றது. இது குறித்து உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா கருத்துத் தெரி­விக்­கையில்

கிழக்கு,சப்­ர­க­முவ, வட­மத்­திய மாகாண சபை­களின் நிர்­வாகம் ஆளு­நர்­களின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும்.இனி­வரும் தேர்­தல்கள் கலப்பு முறையில் இடம்­பெ­ற­வுள்­ளதால், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான தொகுதி எல்­லைகள் வரை­ய­றுக்­கப்­பட வேண்டும். அது நிறை­வ­டையும் வரை, மூன்று சபை­க­ளுக்கும் தேர்­தலை நடத்த முடி­யாது.

வரும் மார்ச் மாதத்­துக்குள்  எல்லை மீள் நிர்­ணயப் பணி­களை அர­சாங்கம் முடித்து விடும். மார்ச் மாதம் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஒழுங்­கு­களை தேர்தல் ஆணைக்­குழு முன்­னெ­டுக்­கலாம்.

மாகா­ண­சபைத் தேர்தல் திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளதால், இந்த மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னர், தேர்தல் ஆணைக்குழு வேட்புமனுக்களைக் கோர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.