இரண்டு வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்பராஜ் தனுஷை வைத்துப் படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், சில பல காரணங்களால் அது நிறைவேறவில்லை. அது கைவிடப்பட்டுவிட்டது என்றே பலரும் நினைத்திருந்தனர்.

தற்போது, இருவரும் தத்தமது படங்களை முடித்துவிட்ட நிலையில், கைவிடப்பட்டதாகச் சொல்லப்படும் படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.

பரபரப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்ததாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி ஹொலிவுட்டிலேயே படமாக்கப்படவிருக்கிறது. படத்தில் தனுஷுக்கு எதிரியாக ஹொலிவுட் நட்சத்திரம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று கார்த்திக் விரும்புகிறார்.

இந்தப் படத்தின் வேலைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.