பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்.

மாகாண சபைத் தேர்தல்களில் திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் திருத்தச் சட்டம் ஒன்று அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது குறித்து நடத்தப்பட்ட சபை வாக்கெடுப்பில் மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

நிறைவேற்றப்பட்ட இச்சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டார்.