இலங்கை வந்துள்ள மேஜர் ஜெனரல் ஹஃபீஸ் உர் ரஹ்மான் தலைமையிலான பாகிஸ்தானின் இராணுவக் குழுவினர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர சி.விஜேகுணரத்னவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

இச்சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்புப் படை பிரதானி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு பாகிஸ்தான் வழங்கிவரும் பயிற்சிகளையும் உதவிகளையும் நினைவுகூர்ந்த அட்மிரல் ரவீந்திர, இலங்கைக்கு பாகிஸ்தான் அளித்துவரும் உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது பரஸ்பரம் நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.