(ஆர்.யசி)

அரசியல் காரணிகளுக்காக தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்க வேண்டாம், மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும்  என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.  

அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை பதவியில் இருந்து நீங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.