கொம்பனித்தெருவில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவன கட்டித்தொகுதியின் வாகன தரிப்பிடப் பகுதியிலிருந்த மூன்று கைக்குண்டுகளை குண்டு செயலிழப்பு பிரிவினர் செயலிழக்கச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேதமடைந்த வாகனம் ஒன்றின் அடிப்பகுதியிலிருந்து  கைக்குண்டுகள் மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு உயர்மட்ட குற்றவியல் விசாரணை அதிகாரிகளும் வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.