விஸ்கிக்கு பதிலாக பியர், வைன் உற்பத்திகளை அதிகரிக்கவுள்ளோம் ; ஜோன் அமரதுங்க 

Published By: Priyatharshan

22 Sep, 2017 | 05:03 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

மதுசாரம் கூடிய விஸ்கி போன்றவற்றிற்கு பதிலாக பியர், வைன் உற்பத்திகளை அதிகரிக்கவுள்ளோம். இதன்படி பியர், வைன் உற்பத்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெறுவதனை இலகுப்படுத்தவுள்ளோம். இது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் போது இதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது புத்திக்க பதிரண எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்திக பதிரண எம்.பி இலங்கை தொடர்பான ஹோட்டல்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது மேலதிக கேள்வி நேரத்தில் தற்போது நாட்டின் பியர் உற்பத்திகள் அதிகரிக்கப்படவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல் உண்மையா? அப்படியாயின் அது நல்லாட்சிக்கு பாதிப்பாகாதா? என்றார்.

இந்த கேள்விக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க பதிலளிக்கையில்,

நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் உண்மை நிலை தெரியவரும். ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் பியர் விற்கப்படுகின்றன. எனினும் இலங்கையில் திருட்டுத் தனமாக சில இடங்களில் பியர் விற்கப்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்குடன் இந்நிலையில் மதுசாரம் குறைந்த  பியர், வைன் உற்பத்திகளை அதிகரிக்கவுள்ளோம். 

இதற்கான யோசனை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளோம். இதன்படி பியர் இவைன் உற்பத்திகளுக்கான அனுமதி பத்திரங்களை பெறுவதனை இலகுப்படுத்தவுள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44