இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து இந்திய அணி ஐ.சி.சி.யின் ஒருநாள் தர வரிசையில் மீண்டும் முதலிடத்தைப்பிடித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி.யின் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க அணியை விட 19 புள்ளிகளால்  இந்திய அணி பின் தங்கியிருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி தென்னாபிரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.