மன்னார், ஒலுதொடுவாய் கடற்பகுதியில் மீன் பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்த நான்கு கடலாமைகளை இலங்கை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

ஒலுதொடுவாய் கடற்பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்த 5 கடலாமைகளை கண்டு அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த 5 கடலாமைகளில் 4 கடலாமைகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவற்றிலொன்று உயிரிழந்துள்ளது.

ஏனைய கடலாமைகளில் சிக்கியிருந்த வலைகள் அவிழ்க்கப்பட்டு மீண்டும் அவை கடற்பரப்பிலேயே விடப்பட்டுள்ளன.