மட்டக்களப்பு மாநகரசபை  ஊழியர்கள் தங்களது  அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்து காந்தி பூங்காவுக்கு  முன்பாக இன்று காலை ஒன்பது மணியளவில் ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர்.

நேற்றயதினம் மாலை  ஐந்து  மணியளவில் மாநகரசபையில் தொழில் புரியும் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்யக்கோரியும் அவர்கள்  இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது  மாநகர சபை ஊழியர்களுக்கும் பொலிஸ்  நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்களுக்கும்  இடையில்  முறுகல்  நிலை  ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.