சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுக்கு அச்­சு­றுத்தல்: ஐ.நா.வின் உதவி செ­யலர் இலங்கைக்கு கண்­டனம்

22 Sep, 2017 | 06:05 PM
image

சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் அச்­சு­றுத்­தப்­பட்டு வரு­வ­தாக இலங்கை மீது, மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா.வின் உத­விச்­செ­யலாளர்  அன்ட்ரூ கில்மோர் குற்­றம்­ சாட்­டி­யுள்ளார்.

ஜெனி­வாவில் உள்ள ஐ.நா தலை­மை­ய­கத்தில் இலங்­கையில் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் அச்­சு­றுத்­தப்­பட்ட செய்தி தம்மை குழப்­பத்தில் ஆழ்த்­தி­ய­தாக 2017 மார்ச் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் தனது உரையில் கூறி­யி­ருந்தார். அவர் இந்த விவ­கா­ரத்தை உதவி செய­ல­ருக்கு அனுப்­பி­யி­ருந்தார்.

ஜெனி­வாவில் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது அமர்வில் கலந்து கொண்ட  எஸ். கணே­ச­நாதன் மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் அச்­சு­றுத்­தப்­பட்­டது தொடர்­பாக ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர்­களும் விசா­ரித்­தி­ருந்­தனர்.

இந்த நிலையில், மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா.வின் உத­விச்­செ­யலர் அன்ட்ரூ கில்மோர் நேற்­று­முன்­தினம் இது தொடர்­பான அறிக்­கையை வெளி­யிட்­டுள்ளார்.

2017 மார்ச் 7- – 9 ஆம் திக­தி­க­ளுக்­கி­டையில் இலங்­கையில் தற்­போ­தைய மனித உரி­மைகள் நிலை­மைகள் தொடர்­பாக கணே­ச­நாதன் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

2017 மார்ச் 11 ஆம் திகதி கல்­முனை காவல் நிலை­யத்தைச் சேர்ந்த குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கணே­ச­நா­தனின் வீட்­டுக்கு சென்று, அவ­ரது உற­வி­னர்கள் மிரட்­டி­யுள்­ளனர். ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது அமர்வில் கணே­ச­நாதன் கலந்து கொண்­ட­மை­யினால், அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை குறித்து, நிபு­ணர்கள் தீவிர கரி­சனை வெளி­யிட்­டுள்­ளனர்.

அதே­வேளை, இந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படும் நேரம் வரையில், இலங்கை அர­சாங்­கத்­திடம் இருந்து எந்த அறிக்­கையும் கிடைக்­க­வில்லை. மனித உரி­மைகள் தொடர்­பாக ஐ.நா.வுடன் ஒத்­து­ழைக்­கின்ற மனித உரிமை ஆர்­வ­லர்கள் அச்­சு­றுத்­தலை எதிர் ­கொள்­வது உல­கெங்கும் அதி­க­ரித்து வரு­கி­றது.

பயணத் தடைகள், சொத்­துக்கள் முடக்கம், தடுத்து வைப்பு, சித்­தி­ர­வ­தைகள் போன்ற மிரட்­டல்கள், அச்­சு­றுத்­தல்­களை தனி­ந­பர்­களும், குழுக்­களும் சந்­தித்­துள்­ளனர். இது வெளிப்­ப­டை­யாக வெறுக்­கத்­தக்க செயல். ஒவ்­வொரு ஆண்டும், இத்­த­கைய மிரட்­டல்கள் குறித்த அறிக்­கை­களை சமர்ப்­பிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ளோம். அந்­தந்த அர­சாங்­கங்கள், ஐ.நா. நிறு­வ­னங்­க­ளு­டனும், பொறி­மு­றை­க­ளு­டனும் ஒத்­து­ழைக்க வேண்டும்.

மக்கள், உரிமை, கௌர­வத்­துக்கு எதி­ரான இந்த நச்­சு பின்­ன­ணியை மௌன­மாக பார்த்து கொண்­டி­ருக்க முடி­யாது. இத்­த­கைய அச்­சு­றுத்­தல்கள் அதி­க­ரித்து வரும் நிலையில், இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு இன்­னமும் விரி­வான அணு­கு­ முறை அவ­சியம் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மனித உரிமை ஆர்­வ­லர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் நாடு­களின் பட்­டி­ய­லை யும் அவர் வெளி­யிட்­டுள்ளார். அதில் இலங்கை மற்றும் அல்­ஜீ­ரியா, பஹ்ரெய்ன், புரூண்டி, சீனா, கியூபா, எகிப்து, எரித்­ரியா,ஹொண்­டூரஸ், இந்தியா, இஸ்ரேல், ஈரான், மொரிட்டானியா, மெக்சிகோ, மொராக்கோ, மியன்மார், ஓமான், தாய்லாந்து, பாகிஸ்தான், ருவான்டா, சவூதி அரேபியா, தென் சூடான், சூடான், தஜிகிஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58