மாகா­ண­சபை தேர்தல் திருத்தச் சட்­ட ­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளதன் மூலம் நாட்டில் நிலை­யான அர­சாங்கம் ஒன்று இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை எதிர்­வரும் ஜன­வரி மாதத்­துக்குள் நடத்­துவோம் என்று மாகா­ண ­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

மாகா­ண­ ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்­போது இருக்கும் விருப்பு வாக்கு தேர்தல் முறை­யினால் திற­மை­யா­ன­வர்­க­ளை­விட வச­தி­ப­டைத்­த­வர்கள் வெற்­றி­பெறும் நிலையே இருந்து வரு­கின்­றது. அத்­துடன் இந்த தேர்தல் முறையில் அதிக வீண்­வி­ர­யங்கள் இடம்­பெ­று­கின்­றன. அதனால் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்­ப­டுத்த வேண்டும் என மக்கள் கோரி வந்­தனர். மக்­களின் கோரிக்­கைக்கு இ­ணங்­கவே தற்­போது உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­சபை தேர்தல் முறையில் திருத்­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.

மாகா­ண­சபை தேர்தல் திருத்­தத்தின் மூலம் எந்த இனத்­துக்கும் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்­பது அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும். அதன் பிர­காரம் சிறு­பான்மை இனங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களின் தலை­வர்கள் மாகாண சபை தேர்தல் திருத்­தச் சட்டமூலத்தில் மேற்­ கொள்­ளப்­ப­ட ­வேண்­டிய தங்­க­ளது திருத்­தங்­களை சமர்ப்­பித்­தி­ருந்­தனர். அந்த திருத்­தங்­க­ளையும் உள்­வாங்­கிக்­கொண்டே திருத்தச் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

மேலும் அனைத்து மாகா­ண­ ச­பை­க­ளுக்­கு­மான தேர்­தல்­களை ஒரே­த­ட­வையில் நடத்­து­வ­தற்கு முன்­வைக்­கப்­பட்ட 20 ஆவது திருத்­தத்­துக்கு மக்கள் அபிப்­பி­ராயம் பெறப்­ப­ட­ வேண்டும் என உயர்­நீ­தி­மன்றம் தெரி­வித்­துள்­ளது. இதனால் தற்­போ­தைய நிலையில் அவ்­வா­றா­ன­தொரு தேர்­த­லுக்கு செல்­வது மிகவும் கடி­ன­மான விடயம் என அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

இந்நிலையில் சப்­ர­க­முவ, வட­மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ண­ ச­பை­களுக்கான ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலை யில் அதற்கான தேர்­தலை பழைய முறை­யிலும் ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தலை புதிய முறை­யிலும் நடத்­து­வது பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தும் என்று கரு­தி இந்த மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தலை உரிய கால த்தில் நடத்­து­வ­துடன் புதிய முறையில் நடத்­து­வ­தற்கும் முடி­யு­மா­கி­யுள்­ளது.

அத்­துடன் மாகா­ண­சபை எல்லை நிர்­ண யங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் அதில் ஏதா­வது திருத்­தங்­களை மக்கள் கோரினால் அத­னையும் மேற்­கொள்ள நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். பல சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்தே உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­சபை தேர்தல் திருத்­தச் ­சட்­டமூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­வைக்கப்­பட்டது. பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து கட்சிகளதும் ஆதரவுடன் சட்டமூலம் வெற்றிபெற்றமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற் றப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் நிலை யான அரசாங்கம் ஒன்று இருப்பது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது என்றார்.