இலங்­கையில் அமை­தியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், இன்னும் அதி­க­மாகச் செய்ய வேண்­டிய பணிகள் உள்­ளன என்று இலங்­கைக்­கான  ஐ.நா.வின் வதி­விடப் பிர­தி­நிதி உனா மக்­கோலி தெரி­வித்­துள்ளார்.

அமை­திக்­கான அனைத்­து­லக நாள் நேற்று கொண்­டா­டப்­ப­டு­வதை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இதனைக் கூறி­யுள்ளார்.

ஒவ்­வொரு ஆண்டும் செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திக­தியை அமை­திக்­கான அனைத்­து­லக நாளாக கொண்­டா­டு­கிறோம்.  எல்லா நாடுகள், மற்றும் மக்­க­ளி­டையே அமை­தியை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த நாளை ஐ.நா. பொதுச்­சபை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இன்று, அனைத்­து­லக சமூகம் என்ற வகையில், எமது கட­மை­களை நினைவில் கொள்ள வேண்டும். வன்­முறை மோதல்­களும், பாகு­பா­டு­களும், மிகவும் பாதிப்­பு­களைத் தரக் கூடி­யன என்­பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு, “அமை­திக்­காக இணைந்­தி­ருந்தல் – அனைவ­ருக்கும் மதிப்­ப­ளித் தல், பாது­காப்பு மற்றும் கௌரவம்” என்ற தொனிப் பொருளில் அமைந்­துள்­ளது.

குறிப்­பாக அக­தி­க­ளையும், குடி­யேற்­ற­வா­சி­க­ளையும் கவ­னத்தில் கொள்­கிறோம். அனை­வ­ரதும் மனித உரி­மை­களை பாது­காத்து, பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு நிரந் ­தரத் தீர்வைக் காண வேண்டும்.

மோதல்­க­ளுக்­கான கார­ணி­க­ளுக்குத் தீர்வு கண்டு, வன்­மு­றை­களைத் தடுத்து, ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது எமது கடப்­பா­டாகும்.

இலங்­கையில் போர் முடிந்து விட்­டது. இன்­னமும் வெறுப்பு மற்றும் பாகு­பா­டு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலை­மைகள் இன்­னமும் உள்­ளன.

நிலை­யான அமை­திக்­காக அனை­வரும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு இன்­னமும் உள்­ளது. அமை­தியைக் கட்­டி­யெ­ழுப்­புதல் மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்கு இன்­னமும் அதி­க­மாகச் செய்ய வேண்­டி­யுள்­ளது. 

இதன் அர்த்தம், நாம் மற்­ற­வரின் மதத்தை, இனத்தை, கலா­சா­ரத்தை, பெறு­மா­னத்தை, அர­சியல் நம்­பிக்­கையை மதி க்க வேண்டும். அர்த்­த­முள்ள முன்­னேற்­றங்­க­ளுக்­காக, வேறு­பா­டு­களை மறந்து இணைந்து செயற்பட வேண்டும்.

பாகுபாடு, சகிப்பற்ற தன்மை மற்றும் சமத்துவமின்மை ஊக்குவிக்கப்படுதல் அல்லது அலட்சியம் செய்யப்படும் வரை, எங்களது முயற்சிகள் பயனற்றவை என் றும் அவர் தெரிவித்துள்ளார்.