ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இருவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (21) முற்பகல் நியூயோர் நகரில் இடம்பெற்றது. 

ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக உத்தியோகபூர்வ அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இருவருக்குமிடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.