(ஆர்.யசி)

நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்க தேர்தல்களை பிற்போட்டு வருகின்றனர். பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

நாட்டுக்கு பொருத்தம் இல்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையை அழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்கை முயற்சித்து வருகின்றனர்.  

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்போட தயாராக இல்லையாம். எனினும் பெண்களின் அரசியல் பலத்தை பெருக்கவே தேர்தல்கள்  தாமதமாகின்றது என்றும் அரசாங்கம் கூறுகின்றது. 

 நாம் உருவாக்கிய இந்த நாட்டின் அமைதியும் ஜனநாயகமும் இன்று அழிக்கப்பட்டு மோசமான திசையில் நாடு பயணித்து வருகின்றது.  மேலும் இந்த நாட்டுக்கு ஏற்கப்படாத பல சட்டங்கள், கொள்கைகள் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது ஒரு இந்த நாட்டை ஆதரிக்கும், நேசிக்கும் எம்மால் ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது உள்ளது. 

பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.