10 ஆவது ஆண்டாக தேசிய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்கும் மஞ்சி

Published By: Priyatharshan

21 Sep, 2017 | 05:37 PM
image

Ceylon Biscuits Limited (CBL) நிறுவனத்தின் பிரதான வர்த்தகநாமமான Munchee, இலங்கை கரப்பந்தாட்ட சங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட தேசிய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2017 இற்கு அனுசரணையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

 

தொடர்ந்தும் 10 ஆவது ஆண்டாகவும் அனுசரணையை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுப் போட்டியானது செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளதுடன், மாபெரும் இறுதிப்போட்டியானது 2017 நவம்பர் 18 ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. நாட்டின் தேசிய விளையாட்டிற்கான பெருமைமிக்க அனுசரணையாளர் என்ற வகையில், இவ்விளையாட்டை அபிவிருத்தி செய்து, பிரபலப்படுத்த Munchee உதவியுள்ளது மட்டுமன்றி, நாடெங்கிலுமுள்ள வளர்ந்துவரும் இளம் வீரர்களுக்கு புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி, தேசிய தளமேடையொன்றையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் தேசிய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நான்கு பிரிவுகளில் புதுமுக மற்றும் சூப்பர் லீக் போட்டிகளாக இடம்பெறவுள்ளன. இச்சுற்றுப்போட்டியானது முதலில் மாவட்ட மட்டத்திலும், அதன் பின்னர் தேசிய மட்டத்திலும் இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டிகள் நவம்பர் 18 ஆம் திகதியன்று மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளரங்கில் இடம்பெறவுள்ளன.

இலங்கையில் முதன்முறையாக இலங்கை கரப்பந்தாட்ட சங்கமானது கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் திருகோணமலை அடங்கலாக பல்வேறு பிரதேசங்களில் வெளிப்புற மைதானங்களில் பல பிரத்தியேகமான போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த மைதானங்களில் நாட்டில் முதல் 8 இடங்களிலுள்ள ஆண்கள் அணிகளும், முதல் 6 இடங்களிலுள்ள பெண்கள் அணிகளும் தமது விளையாட்டுத் திறமைகளை நேரே காண்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

வழமையாக பிரதான போட்டிகள் அனைத்தும் உள்ளரங்குகளிலேயே இடம்பெறுவதுடன், கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோரே அதனை நேரில் கண்டு மகிழும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். 

எனினும் கடந்த ஆண்டு மாநாட்டில் போட்டிகளை வெளிப்புற மைதானங்களில் ஏற்பாடு செய்வதால் உயர் மட்டப் போட்டிகளை பெரும் எண்ணிக்கையான ஆர்வலர்கள் நேரடியாக கண்டுகளிக்க வாய்ப்புக் கிடைக்கும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதற்கமைவாக நாடெங்கிலுமுள்ள கரப்பந்தாட்ட ஆர்வலர்களை மகிழ்விக்க பல பிரத்தியேகமான போட்டிகள் வெளிப்புற மைதானங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு போட்டியில் 2,500 முதல் 3,000 வரையான அணிகள் பங்குபற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை கரப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவரும், மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய Munchee வழங்கியுள்ள பங்களிப்பு தொடர்பாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில்,

“தொடர்ந்து 10 ஆண்டுகளாக Munchee தேசிய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடாத்தி, கரப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளமைக்காக Munchee இற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நாடெங்கிலுமுள்ள இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளுக்கான வாய்ப்புக்களை மேம்படுத்தி, தேசிய மட்டத்தில் அவர்கள் தமது திறமைகளைக் காண்பித்து விளையாடும் வகையில் வளர்ப்பதற்கான முயற்சிகளை Munchee முன்னின்று மேற்கொண்டு வந்துள்ளது. 

வர்த்தக நிறுவனம் ஒன்று வர்த்தகரீதியான தனது நோக்கங்களிலிருந்து மாறுபட்டு, தேசிய முயற்சி ஒன்றுக்கு பங்களிப்பாற்ற முன்வந்துள்ளமை மிகச் சிறந்த ஒரு தருணமாகும். இளம் வயதிலேயே விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பது, உரமான எண்ணமும், உடலுறுதியும் கொண்ட எதிர்காலத் தலைமுறையொன்றைத் தோற்றுவிக்க உதவுகின்றது. இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்தும் குறிப்பிடும்படியான சேவைகளை வழங்கும் வலிமையையும், தைரியத்தையும் Munchee பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு தொடர்பில் Ceylon Biscuits Limited நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நளின் கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,

“முன்னிலை வகிக்கின்ற ஒரு உள்நாட்டு பெரும் நிறுவனம் என்ற வகையில் Munchee தேசிய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்குவதன் பிரதான நோக்கமானது நாட்டின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவவேண்டும் என்பதாகும். 

நாட்டில் மிகப் பாரிய மற்றும் பெருமளவானோர் விரும்புகின்ற விளையாட்டாக இது காணப்படுவதுடன், கடந்த பத்து ஆண்டுகளாக இத்தேசிய நிகழ்வுக்கு அணுசரணையளிப்பதில் நாம் பெருமை அடைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருணாரட்ன மேலும் விளக்குகையில், “புதுமைப் புரட்சிகளுக்குப் பிரபல்யமான முன்னிலை வகிக்கின்ற ஒரு உள்நாட்டு பெரும் நிறுவனம் என்ற வகையில், நமது தேசிய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளராக மட்டுமன்றி, சர்வதேச அளவில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உள்நாட்டுத் திறமைகளைக் கையாளுவதற்கான ஒரு முக்கிய ஆதரவாளராகவும் விளங்குவதையிட்டு நாம் பெருமையடைகிறோம். எமது பிரதான வர்த்தகநாமமான Munchee மூலமாக மீண்டும் ஒரு முறை இந்த ஆண்டிலும் தேசிய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கு அனுசரணையை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். வெளிப்புற மைதானங்களிலும் போட்டிகளை நடாத்தவேண்டும் என இந்த ஆண்டில் தீர்மானித்துள்ளமை, எமது இளம் வீரர்களுக்கு ஆதரவளித்து, மனவுறுதியை மேம்படுத்துவதற்கு பெருமளவான பார்வையாளர்களை ஈர்க்கும் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.

Ceylon Biscuits Limited நிறுவனம் கரப்பந்தாட்டத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி, கிரிக்கெட், உதைபந்தாட்டம், ஸ்குவாஷ் , தடகள விளையாட்டுக்கள் மற்றும் மேலும் பல விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. அடிக்கடி விளையாட்டு உற்சாக உணர்வை வளர்த்து அதற்கு ஆதரவளித்து வரும் ஒரு நிறுவனம் என்ற வகையில், CBL நிறுவனம் வர்த்தக உலகில் முன்னிலை வகித்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18