புத்தளம் - கட்டுகஸ்தோட்டை பிரதான வீதியில் உள்ள தெதுரு ஓயா பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆறு நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமான பழுதுபார்ப்பு வேலைகள் நடைபெறவுள்ளதாலேயே மேற்படி பாலம் மூடப்படுவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருத்த வேலைகள் நடைபெறும் ஆறு நாட்களும், இருசக்கர, முச்சக்கர வண்டிகள் அனுராதபுரம் - பேராதனை பிரதான வீதியில் அமைந்துள்ள நிக்கவரெட்டிய வீதியின் பலல்ல வீதியூடான பாதையைப் பயன்படுத்துமாறும், கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் நிக்கவரெட்டிய வீதியில் தலதா சந்தியூடான பாதையைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.