‘சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதமும் தெரிவித்தோம். அத்துடன் திருமணத்திற்கு பிறகு நடிப்பைத் தொடரக்கூடாது என்றோம். ஆனால் இதனை ஹன்சிகா ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இருவரும் பிரிந்தனர்.’ என்று சற்று தாமதமாக விளக்கமளித்திருக்கிறார் நடிகரும் இயக்குநரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர்.

ஆனால் இந்த நிபந்தனையை சிம்புவின் தாயார் விதித்ததாகவும், அதனாலேயே ஹன்சிகாவிற்கு பிடிக்காமல் போனதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் விளக்கமளித்தனர்.

தற்போது சிம்புவிற்கும் கையில் படமில்லை. ஹன்சிகாவிற்கும் பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்