சொந்த படம் எடுத்து வெற்றிப் பெறாததால் தவித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஆர்யாவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது. இதில் தனுஷ் வெற்றிப் பெற்றிருக்கிறார். தனுஷ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி, அதில் ஆர்யாவை நாயகனாக நடிக்க வைக்கவிருக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தை முடிவடைந்ததால், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

ஆர்யா தற்போது அமீரின் இயக்கத்தில் ‘சந்தனதேவன்’ என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்