விசா மற்றும் கடவுச்சீட்டுக்களின்றி கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்களை பண்டாரவளைப் பொலிசார் நேற்று மாலை விடுதலை செய்தனர்.

பண்டாரவளைப் பகுதி ஆலயமொன்றில், சிற்ப நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நால்வரும் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, கைது செய்யப்பட்ட நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டுக்களை, பொலிசாரிடம் காண்பித்ததும், அவர்கள் அதனை பரிசீலனை செய்தபின்னர், கைது செய்யப்பட்ட நால்வரையும், ஆலய பரிபாலன சபையினருடன் செல்ல அனுமதித்தனர்.

இதையடுத்து குறித்த நால்வரும் ஆலயப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.