கொழும்பு மெனிங் சந்தை பேலியகொடைக்கு மாற்றும் பணிகள்  30 ஆம் திகதி ஆரம்பம் 

Published By: Priyatharshan

27 Jan, 2016 | 05:21 PM
image

(க.கமலநாதன்)

 மேல் மாகண அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 29  ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதையடுத்து  மறுதினம்  30 ஆம் திகதி கொழும்பு மெனிங் சந்தையை பேலியகொடையிற்கு இடமாற்றம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெறும் என்று  மேல்மாகாண அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுர்க்க வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா   சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாநகர மட்டும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் 160 அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் மூலம் கொழும்பில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த கோட்டை பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மெனிங் சந்தையை பேலியகொடை மீன்சந்தைக்கு அருகாமையில் இடமாற்றம்  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  

இதனடிப்படையில் சென் ஜோன் மீன் சந்தை, மறக்கறி மற்றும் மொத்த பழ வியாபாரிகளின் கடைத்தொகுதிகளும் பேலியகொடையில் இருக்கும்.  

மேலும் குறித்த சந்தையின் இடமாற்ற செயற்பாடுகளுக்கென நான்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அரச நிறுவனங்கள் யாவும் பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறித்த விடயங்கள் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த அபிவிருத்தி திட்டங்களால் மக்கள் குடியிருப்புக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் அதற்கான   மாற்றுத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32