கென்யாவில் 3 பில்லியன் ரூபா திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

Published By: Devika

20 Sep, 2017 | 06:22 PM
image

கென்ய தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கை (3 பில்லியன் ரூபா) திருடிய குற்றச்சாட்டில், சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

மோஷீன் ரணதுங்க என்பவர் 2012, ஜூலை மாதம் 90 நாள் விசாவில் கென்யா சென்றிருந்தார். எனினும் சட்டவிரோதமாக 2016ஆம் ஆண்டு வரை அங்கு தங்கியிருந்த அவர், தான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கென்யாவை விட்டுத் தப்பியோடியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் கென்யா வந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மோஷீனை நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது, அவர் ஏற்கனவே நாட்டை விட்டுத் தப்பியோடியவர் என்றும், தற்போது சட்டவிரோதமாக கென்யாவில் வாழ்ந்துவரும் அவரது கடவுச்சீட்டு இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறிய அரச தரப்பு சட்டத்தரணி, மோஷீனை பிணையில் விடுவிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அவருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53