(க.கிஷாந்தன்)

 

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயத்திற்குள்ளாகியுள்ளனர்.

Accident

ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியும் இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியார்கள் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.