Sony International (Singapore) Ltd நிறுவனம், இலங்கையில் Sony இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த விமரிசையான நிகழ்வொன்றில், SHAKE Model மற்றும் EXTRABASS ஸ்பீக்கர்களின் புதிய, விசாலமான உற்பத்தி வரிசையை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.

SHAKE Model மற்றும் EXTRABASS உற்பத்தி வரிசையின் கீழ் அனைவரையும் ஈர்க்கக்கூடிய புதிய உற்பத்திகள் அனைத்து வகையான வீட்டு பொழுதுபோக்கு தேவைகளுக்கும் உகந்தவையாக, சரியான அளவில் களிப்பாட்டத்திற்கு உதவும் வகையில், மிகவும் அடக்கமான மற்றும் இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய அளவுகளில் வலுவான ஓடியோ மற்றும் பாய்ச்சி அடிக்கும் ஒளி எந்தவொரு களியாட்ட நிகழ்வையும் உயிரோட்டம் நிறைந்ததாக மாற்றியமைக்கும் வகையில் வடிவமைப்புச்செய்யப்பட்டுள்ளன. 

இசையை நேசிப்பவர்கள், அதிலும் குறிப்பாக EDM கலாச்சார இசை நடனத்தை அனுபவித்து மகிழ்பவர்களுக்கு நடன மேடையில் சனத்திரளின் இரைச்சலுக்கும் மேலாக வலுவான ஒலியை பிறப்பிக்கின்ற பாரிய அளவிலான வலுத்தூண்களாக களிப்பாட்டத்திற்கு உதவுகின்றது.

நாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள புதிய உற்பத்தி வரிசை தொடர்பில் Sony International (Singapore) Ltd - இலங்கைப் பிரதிநிதி அலுவலகத்தின் கிளைத் தலைமை அதிகாரியான ஜஸ்டின் வோங் கருத்து தெரிவிக்கையில்,

“மிகவும் நன்மதிப்புப் பெற்ற மற்றும் உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகளுள் ஒன்றாக Sony திகழ்ந்துவரும் நிலையில், SHAKE மற்றும் EXTRABASS ஓடியோ ஸ்பீக்கர் உற்பத்தி வரிசையில் வியக்கவைக்கும் இப்புதிய உற்பத்திகளை சேர்த்துள்ளமையை முன்னிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த உற்பத்தி வரிசையானது விசுவாசம்மிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு ஆனந்த அனுபவத்தை வழங்கும் என நாம் நம்புகின்றோம். மிகச் சிறந்த ஓடியோ சாதனங்களை கொள்வனவு செய்வதில் இலங்கை மக்கள் விசேடமாக விவேகமான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். 

ஆகவே இந்த உற்பத்தி வரிசையானது அவர்களுடைய தேவைகளை ஈடு செய்யும்” என்று குறிப்பிட்டார்.

EXTRABASS எடுத்துச்செல்லக்கூடிய வயர்லெஸ் ஸ்பீக்கரின் தற்போதைய உற்பத்தி வரிசையில் SRS-XB10, SRS-XB20, SRS-XB30 மற்றும் SRS-XB40 ஆகிய நான்கு புதிய உற்பத்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட இடங்கள் மற்றும் சூழ்நிலைகளில் இசையின் ஆழமான bass வடிவங்களை உயர்வாக அனுபவிப்பதற்கு இடமளிக்கும் வகையில் இந்த விசேட ஸ்பீக்கர்கள் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளன. EXTRABASS தொழில்நுட்பமானது வலுவான மற்றும் தெளிவான bass இசையை வெளிக்கொணருவதுடன் எந்தவகையான இசையை விரும்புபவர்களாக இருப்பினும், இரவுப் பொழுதில் ஆனந்தமாக களியாட்டத்தை அனுபவிப்பதற்கு ஒளிவெள்ளத்துடன் ஒன்றியதாக முழுமையான, ஆழமான மற்றும் வலுவான இசையை வழங்குகின்றன. பாவனைக்கு மிகவும் இலகுவான வகையில் இந்த ஸ்பீக்கர்கள் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு பட்டனைத் தொடுவதன் மூலமாக அதனை இணைத்து , NFC மற்றும் Bluetooth இணைப்பு இசைவாக்கத்துடன் இசையை வெளிக்கொணருகின்றன.

இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய அளவில் உள்ளமையாலும், நீண்ட நேரம் பட்டரி நீடித்து உழைப்பதாலும், பாவனையாளர்கள் இதன் சௌகரியத்தை உணர்ந்து கொள்வதுடன், இது அவர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது. IPX5 ஆனது நீர் உட்புகாத வகையில் ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீச்சல் தடாகத்தில் இசையை அனுபவித்து மகிழ்வதற்கு உகந்தது. நான்கு ஸ்பீக்கர்களும் நெகிழ்வுப்போக்குடைய இரு-வழி வடிவமைப்பைக் கொண்டுள்ளதால், அவையை எந்த இடத்தில் வைத்தாலும் மகத்தான ஒலியைப் பிறப்பிக்கின்றன. இட வசதியை மீதப்படுத்துவதற்காக அவற்றை கிடைமட்டமாக அல்லது நிலைக்குத்தாக வைத்துப் பேண முடியும்.

EXTRABASS உற்பத்தி வரிசையின் கீழ் Sony இன் புதிய ஹோம் ஓடியோ சிஸ்டம் புதிய வடிவங்களான MHC-V90DW, GTK-XB60 மற்றும் GTK-XB90 ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. உங்களுடைய வீட்டிலேயே சௌகரியமாக விருந்து ஏற்பாட்டை மேற்கொள்வதற்கு துணையாக மகத்தான இசைக்கும் இவை உத்தரவாதம் அளிக்கின்றன. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வரவுசெலவுத்திட்டத்தைக் கொண்டுள்ளதுடன் சிறிய அளவை விரும்புபவர்களுக்கு உகந்த ஒன்றாக GTK-XB60 உள்ளது. 

8 கிலோ எடையுடன் 14 மணி வரை பட்டரி நீடித்து நிலைப்பதுடன் வியப்பூட்டும் வர்ணத் தெரிவுகளில் கிடைக்கின்றது. பாரிய மற்றும் சத்தமான இசையை விரும்புகின்றவர்களுக்கான GTK-XB90 வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், 14 கிலோ எடையுடன், திருவிழா வெளிச்ச அலங்காரத்தை ஏற்படுத்தும் வகையில் infinity mirror lighting வெளிச்ச பிரவாகத்தைக் கொண்டது.

உங்களுடைய இல்லத்தில் முழுமையான அம்சங்கள் நிரம்பிய, வலுவான இருப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள SHAKE-X10Dமற்றும் SHAKE-X70D ஆகியவற்றையும் Sony அறிமுகப்படுத்தியுள்ளது. வசிக்கும் அறையில் ஓடியோ வசதிக்கு இவை நேர்த்தியாக அமைந்துள்ளன. ஒலி அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கின்ற உள்ளக மடிப்பு ஊதுகொம்பு வடிவமைப்பினூடாக ஆன்மாவை ஆட்டுவிக்கும் bass இசையை வழங்கும் இசை அழுத்த ஊதுகொம்பின் உதவியுடன் பாவனையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான இசைத்தடங்களை தற்போது சுகமாக கேட்டு அனுபவிக்க முடியும். முற்றுமுழுதாக புதிய மட்டத்தில் இசையை அடையப்பெறுவதற்கு இலகுவாக தொலைக்காட்சியுடன் இணைக்க உதவும் வகையில், உள்ளிணைப்புச் செய்யப்பட்ட DVD பிளேயர் மற்றும் HDMI நுழைமுகம் ஆகியவற்றுடன் SHAKE-X70D வெளிவந்துள்ளதுடன், உங்களுடைய திரைப்படம் மற்றும் இசை வேளையை மேம்படுத்தும் வகையில் ஆழமான மற்றும் வலுவான இசையை வழங்குகின்றது. வலிமையான இசை, ஒளியூட்டல் அம்சங்கள் மற்றும் வியக்கவைக்கும் உயரமான வடிவமைப்புக்களுடன், இந்த உற்பத்தி மாதிரிகள் அனைத்தும் உங்களுடைய வீட்டிலுள்ள எந்த அறையையும், நடன மேடையாக மாற்றியமைக்க உதவும் வகையில் Wireless Party உடன் இலகுவாக இணைக்கப்படக்கூடியது. இந்த உற்பத்தி வரிசையில் MHC- V77D, MHC-V50D மற்றும் MHC-V11 ஆகிய வடிவங்கள் அடங்கியுள்ளன.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த உற்பத்திகள் அனைத்தும் நாடளாவியரீதியில் 420 இற்கும் மேற்பட்ட விற்பனைக் காட்சியறைகள் மற்றும் முகவர் மையங்களை உள்ளடக்கிய சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள் அடங்கிய நாட்டின் மிகப் பாரிய விற்பனை வலையமைப்பினூடாகக் கிடைக்கப்பெறுகின்றன.