திட்டமிடப்பட்ட ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளருடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் கைவிடத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இன்று இரவு 12 மணியிலிருந்து ரயில்வே ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த நிலையிலேயே பிரதமரின் செயலாளருடனான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.