மெக்சிக்கோவில் இடம்பெற்ற அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் மெக்சிக்கோ நகரில் குறைந்தது 20 வரையான பாடசாலை மாணவர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 30 பாடசாலை மாணவர்களை காணவில்லையெனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள  பூஎப்லா பகுதிக்கு அருகாமையில் 7.1 ரிச்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மெக்சிகோவில்  பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.  

இந்நிலையில் குறித்த பூமியதிர்வு காரணமாக இன்றுவரை  226 பேர் உயிரிழந்திருப்பதாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.