விசா இருந்தும் குடி­யேற்ற அதி­கா­ரிகள் அனு­மதி மறுத்­ததால் தென்­னா­பி­ரிக்கா செல்ல முடி­யாமல் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் வீரர் ருபெல் ஹொசைன் தவித்து வரு­கிறார்.

பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி தென்­னா­பி­ரிக்கா சென்று 3 வகை கிரிக்கெட் தொட­ர்களிலும் விளை­யாட இருக்­கி­றது. 

இதற்­காக பங்­க­ளாதேஷ் அணி வீரர்கள் கடந்த சனிக்­கி­ழமை தென்­னா­பி­ரிக்கா புறப்­பட்­டனர். அந்த அணியில் வேகப்­பந்து வீச்­சாளர் ருபெல் ஹொசைன் இடம்­பி­டித்­துள்ளார்.

அனைத்து வீரர்­களும் விமா­னத்தில் ஏற தயா­ராக இருக்­கும்­போது ருபெல் ஹொசைனை மட்டும் தென்­னா­பி­ரிக்க குடி­யேற்ற அதி­கா­ரிகள் விமா­னத்தில் செல்ல அனு­ம­திக்­க­வில்லை. இதனால் விமான ஊழி­யர்கள் அவரை ஏற்ற மறுத்­து­விட்­டனர்.

இதனால் ருபெல் ஹொசைன் டாக்­காவில் உள்ளார். தென்­னா­பி­ரிக்க நாட்டின் விதிப்­படி விசா இருந்­தாலும் குடி­யேற்ற அதி­கா­ரிகள் விமா­னத்தில் ஏற அனு­மதி அளித்தால் மட்­டுமே விமான ஊழி­யர்கள் அவரை ஏற்றிச் செல்­வார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.