ரோஹிங்­யா அக­தி­க­ளுக்­காக அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து எந்த உத­வி­யையும் எதிர்­பார்க்­க­வில்லை என்று ட்ரம்பை சந்­தித்த பின்னர் பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹசினா கூறி­யுள்ளார்.

ஐ.நா. பொது­சபை கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹசினா அமெ­ரிக்கா சென்­றுள்ளார். ஐ.நா. சபையில் சீர்­தி­ருத்தம் மேற்­கொள்­வது குறித்த கூட்­டத்தில் பங்­கேற்ற அவர், அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்பை சந்­தித்து பேசினார். 

இந்த சந்­திப்­பிற்கு பின்னர் ஹசினா செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து தெரி­வி­க்கையில்.

"பங்­க­ளாதேஷ் எப்­படி இருக்­கி­றது?", என ட்ரம்ப் கேட்­ட­தா­கவும் அதற்கு நாடு நன்­றாக இருக்­கி­றது, ஆனால் ரோஹிங்­யா அக­திகள் விவ­காரம் மட்­டுமே பிரச்­சி­னை­யாக உள்­ளது", என பதி­ல­ளித்­த­தா­கவும் கூறினார். ஆனால் இது குறித்து அவர் எந்­த­வித கருத்தும் தெரி­விக்­க­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அக­திகள் பிரச்­சி­னையில் அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து எந்­த­வித உத­வி­யையும் எதிர்­பார்க்­க­வில்லை. அமெ­ரிக்கா ஏற்­க­னவே அக­தி­களை அனு­ம­திக்க மாட்டோம் என கூறி­விட்­டது. அதன்­பின்னர் அமெ­ரிக்­கா­விடம் குறிப்­பாக ஜனா­தி­ப­தி­யிடம் எந்த உத­வியை எதிர்­பார்க்க முடியும்? அவர்கள் ஏற்­க­னவே தங்கள் முடிவை எடுத்து விட்­டார்கள். பங்­க­ளாதேஷ் பணக்­கார நாடு. ஒரு இலட்­சத்து 60 ஆயிரம் பேருக்கு உண­வ­ளித்து வரு­கிறோம், கூடு­த­லாக 4 இலட்சம் பேருக்கு உண­வ­ளிப்­பது எங்­க­ளுக்கு பிரச்­சினை இல்லை, என்று கூறினார்.