ராஜபக்ஷ அர­சாங்கம் யுத்­தத்தின் மூலம் புலி­களை வெற்றி கொண்­ட­போதும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­ தற்கு எந்த வேலைத்­திட்­டமும் அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை. தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்கு  நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தாலும் பிரச்­சினை இல்லை என்று பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா கட்சி செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

30 வருட யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு மஹிந்த ராஜபக்ஷ் எடுத்த அர­சியல் தீர்­மா­னத்தை யாரும் மறக்க முடி­யாது. எந்த அர­சியல் கொள்­கையில் இருந்­தாலும் நாட்டு மக்கள் அவ­ருக்கு நன்­றி­யு­டை­ய­வ­ராக இருக்­க­வேண்டும். அது வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மான தீர்­மா­ன­மாகும். அத்­துடன் சர்­வ­தேச நாடு­களின் அழுத்­தங்கள் மற்றும் உயிர் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யிலே அவர் இந்த தீர்­மா­னத்தை எடுத்து யுத்­தத்தை வெற்­றி­கொள்ள தலை­மைத்­துவம் வகித்தார்.

அத்­துடன் மஹிந்த ராஜபக்ஷ் வாழ்நாள் முழு­வதும் இந்த நாட்டில் அர­ச­ராக இருக்­க­வேண்­டி­யவர். என்­றாலும் அது நடை­பெ­ற­வில்லை. ஏனெனில் அவரை சுற்­றி­யி­ருந்த ஆலோ­ச­கர்கள் சரி­யான ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருந்தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. அவரின் தோல்­வி­யுடன் நாடும் நிலை­யான நிலைப்­பாட்டில் இருந்து விழுந்­துள்­ளது.

விடு­த­லைப்­பு­லி­களை யுத்­தத்தின் மூலம் தோல்­வி­ய­டை­யச்­செய்­தாலும் அவர்­களால் சமூ­க­ம­ய­மாக்­கி­யுள்ள பிரி­வி­னை­வாத நிகழ்ச்சி நிரலை தோற்­க­டிக்க முடி­ய­வில்லை. அதே­போன்று அதன் அர­சியல், சர்­வ­தேச முன்­ன­ணி­களை தோற்­க­டிக்க முடி­யாமல் போயுள்­ளது.  

உண்­மை­யான விடு­த­லைப்­பு­லிகள் வடக்கில் இல்லை. சர்­வ­தே­சத்­திலே இருக்­கின்­றனர். அவர்கள் சொல்­வ­தையே பிர­பா­கரன் இங்கு மேற்­கொண்டார். ஆனால்  எங்­களால் சர்­வ­தே­சத்தை வெற்­றி­கொள்ள முடி­ய­வில்லை.

வடக்கில் யுத்தத்தின் மூலம் புலி­களை வெற்­றி­கொண்ட பின்னர் அங்கு அடிப்­படை வச­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டன, பாட­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. ஆனாலும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு அன்று அர­சாங்­கத்­திடம் எந்த வேலைத்­திட்­டமும் இருக்­க­வில்லை.  

என்­னதான் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்­டாலும் மக்­களின் உள்­ளத்தை மாற்­று­வது இல­கு­வான விட­ய­மல்ல. அன்று மஹிந்த ராஜ­பக்ஷ்­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­ப­வர்களாக நாங்கள் இருந்­தி­ருந்தால் துட்­டகைமுனு மன்­னனின் முன்­மா­தி­ரியை பின்­பற்­று­மாறு தெரி­வித்­தி­ருப்போம்.  அத்­துடன் தேசிய ஒற்­று­மையை பாது­காத்­துக்­கொள்ளும் பொருட்டு நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்­காக  நினை­வுத்­தூபி ஒன்றை அமைப்­பதும் பிரச்சினை இல்லை.  

ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ் இங்குள்ள மக்களுக்கு வீரர்போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வீரராவார். சரியோ பிழையோ அதுதான் உண்மை. யுத்த வெற்றி விழாக்களை கொண்டாடவேண்டும். நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு அந்த மக்களின் உரிமையையும் பாதுகாக்கவேண்டும் என்றார்.