குடும்பத் தக­ரா­றொன்று தொடர்பில் பிட்­டி­கல பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்பட்ட சந்­தேக நபர் ஒருவர் பொலிஸ்  சிறைக் கூண்­டுக்குள் உயி­ரி­ழந்­துள்ளார்.

சிறைக் கூண்­டுக்குள் கைதி ஒருவர் உயி­ரி­ழந்­தமை தொடர்பில் பிட்­டி­கல பொலிஸ் நிலைய பொறுப்­பத்­கி­கா­ரிக்கும் கட­மையில் இருந்த குறித்த கைதி தொடர்பில் பொறுப்புக் கூறத்­தக்க பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் எதி­ராக விசேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

நேற்று பகல் பிட்­டி­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மாரக்­கொட பகு­தியைச் சேர்ந்த 42 வய­து­டைய மாகொட பத்­தி­ர­ணகே ஹேம விபுல் என்­பவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்பட்­டுள்ளார். கைது செய்­யப்பட்ட சந்­தேக நபர்  பொலிஸ் சிறைக் கூண்டில் அடைத்து வைக்­கப்பட்­டுள்ளார். குடும்பத்தக­ராறு கார­ண­மாக அவர் இவ்­வாறு கைது செய்­யப்பட்­ட­தாக பிட்­டி­கல பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இந் நிலையில் திடீ­ரென குறித்த கைதி பொலிஸ் சிறைக் கூண்­டுக்குள் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மீட்­கப்பட்­டுள்ளார். குறித்த கைதி கூண்­டுக்குள் தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தாக பொலிஸார் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

எவ்­வா­றா­யினும் பொலிஸ் கூண்­டுக்குள் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளமையால் அது தொடர்பில் பிட்­டி­கல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ராக விசேட விசா­ரணை ஒன்­றினை நடத்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர உத்­தரவிட்­டுள்ளார். 

அதன்­படி குறித்த விசா­ர­ணையின் பின்னர்  அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்றுநட­வ­டிக்­கை­களை எடுக்கவும் பொலிஸ்மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.