பயிற்சியொன்றின்போது இராணுவ ஹெலிகொப்டர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் மூன்று வாகனங்கள் சேதங்களுக்குள்ளாகின. இச்சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேற்கு ரஷ்யாவின் கிராமப்புறப் பகுதியில் ரஷ்ய இராணுவத்தினர் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, ஹெலிகொப்டர்களின் தாக்குதல் பயிற்சிக்காக இராணுவ கவச வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

எனினும், அங்கு தாக்குதல் நடத்தப்படப் போவதற்கான எந்தவித அடையாளமும் குறிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால், குறித்த கவச வாகனத்துக்குச் சற்று அருகாமையில் மூன்று வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அப்போது அங்கு பறந்து வந்த இராணுவ ஹெலிகொப்டர்கள், தமது இலக்கு மீது தாக்குதல் நடத்தின.  இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதங்களுக்கு உள்ளாகின.

அப்போது அங்கே நடந்து சென்றுகொண்டிருந்த நபரொருவரும் தாக்குதலால் கடும் மூளை அதிர்ச்சிக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.