வடக்கு மாகாணமும்,  கிழக்கு மாகாணமும் இணைவதற்கு  நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இந்த விடயத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம் என நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய  அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

"கிழக்கு மாகாணம் ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல, அதில் முஸ்லிம்  மக்கள்  தெளிவாக இருக்க வேண்டும்  கிழக்கு மாகாணம் என்பது கிழக்கில் வாழும் ஒவ்வொரு  மகனுக்கும் சொந்தமான மாகாணம்  கிழக்கு  மாகாணத்தை  மூவின மக்களும் ஆளவேண்டும்,

சந்திர காந்தன் முதலமைசராக  இருந்தார் தற்போது  நசீர் இருக்கின்றார், வருகின்ற காலத்தில் ஒரு சிங்களவர்  இருக்க வேண்டும், கிழக்கு மாகாணம் என்பது மூவின மகளும்  ஒற்றுமையாக  இருக்கின்ற ஒரு மாகாணம்,  

ஆகவே இம் மாகாணத்தை வடக்கோடு இணைத்து, கிழக்கை அனாதரவாக்கி மீண்டும் இம் மண்ணில் இரத்தாறை ஓடவைத்து ஒரு யுத்த சூழலை உருவாக்க நாங்கள் யாரும் அனுமதிக்க முடியாது,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி பிரதிநிதிகள் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் ஆலோசனைகளை முன் வைத்த வண்ணம் உள்ளனர் பிரதமரும் அண்மையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்,

இனப்பிரச்சினைக்கு தீர்வு  காணப்படவேண்டும், இன்னும் தீர்வு காணப்படவில்லை, யுத்தம் மாத்திரம்தான் முடிவடைத் திருக்கின்றது இந்த இனப்பிரச்சினை தீர்வு  விடயத்தில் அரசாங்கம்  தவருமாக  இருந்தால் மீண்டும்  வடகிழக்கில் யுத்தம் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது,

தங்களுடைய நிர்வாகத்தை  தாங்களே செய்யகூடிய வளமான மாகாணசபை  உருவாக்கப்பட வேண்டும், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம் என்று தனியான மாகாணங்கள்  உருவாக்கப்பட வேண்டும் அதன் மூலமே எமது பிரச்னைக்கு தீர்வு  காண முடியும்,

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக யாராவது பேசிக்கொண்டு இருந்தால் அது சாத்தியமற்றது என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்,

குறிப்பாக தமிழ், முஸ்லிம்  தலைமைகள் எமது இனத்தை காட்டிக்கொடுத்து மீண்டும் ஒரு இரத்த கரைக்குள் பலியாவதற்கு அனுமதிக்க முடியாது,

முஸ்லிம்  தலைமைகள் இன்றுவரைக்கும் பாராளுமன்றத்தில்  முஸ்லிம்கள் பற்றி எந்தவித அறிக்கையும் சமர்பிக்க வில்லை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதை செய்ய தவறியுள்ளார், கிழக்கு மாகாண முதலமைச்சர் என்னை பற்றி பல மேடைகளில்  பேசியுள்ளார் அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை எமது மார்க்கத்தில் ஒருவரை பற்றி ஒருவர் தூற்றுவது இல்லை.

ஆகவே விமர்சனங்களை விட்டு விட்டு நாங்கள் ஒற்றுமை பட வேண்டும், எந்த நிமிடமும் எமது பதவி எம்மை விட்டு போகலாம், அரசியல் வாதிகளை இன்றுமக்கள்  விமர்சிக்கும் அளவுக்கு  வந்துள்ளது, எமது  கடமைகளை  நாம் நன்றாக செய்ய வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.