அதிக துரித செயற்பாட்டு ஆற்றல், செலவுத் திறன் மற்றும் வேகமான புத்தாக்கம் ஆகிவற்றை வழங்கும் வகையில் தொழிற்துறையில் மிகவும் முழுமையான தீர்வுகள் கொண்ட ஒரு உற்பத்தியை வழங்கி டிஜிட்டல் மாற்றத்திற்கு இடமளிக்கின்றது.

உட்கட்டமைப்பு மற்றும் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்லும் இயக்கத்திறன் ஆகியவற்றில் சர்வதேசரீதியாக முன்னிலை வகித்து வருகின்ற VMware Inc. (NYSE: VMW), உள்நாட்டிலுள்ள நிறுவனங்கள் தமது தரவு மையங்களை (data center) நவீனமயப்படுத்தி, டிஜிட்டல் துறையில் வலுவூட்டலைப் பெற்று, பொது cloud தளங்களை ஒருமுகப்படுத்தி, பாதுகாப்பான வழியில் அவற்றை மாற்றியமைக்க உதவுவதன் மூலமாக, இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்திற்கு இடமளிப்பதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை மீளவும் எடுத்துரைத்துள்ளது. VMware தொழில்நுட்பத்தின் மூலமாக, இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் போட்டித்திறன் அனுகூலத்தை ஈட்டி, புதிய சந்தைகளில் விரிவாக்கமடைவதற்கு இடமளித்து, புதிய தீர்வுகள் மற்றும் பயன்பாடுகளை (application) அபிவிருத்தி செய்து, மிகச் சிறந்த மட்டத்தில் வாடிக்கையாளர் அனுபவங்களை விநியோகிக்க முடியும்.

கடந்த காலங்களில் இலங்கையின் தொழில்நுட்பத்துறையானது முதிர்ச்சி கண்டுள்ளதுடன், தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்பத்துறையானது நாட்டில் வருமானத்தை ஈட்டித்தருவதில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டளவில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டித்தரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்நாட்டு தொழிற்துறையானது அறிவுசார் சொத்து அபிவிருத்தி மற்றும் மென்பொருள் பொறியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளதுடன், அது 20,000 பேருக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், 1,000 புதிய வியாபார முயற்சிகளையும் தோற்றுவிக்கும் 1 என எதிர்பார்க்கப்படுகின்றது.

“இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் புதிய உற்பத்திகள் மற்றும் பெறுமதி-சேர் சேவைகள் மூலமாக தங்களை தனித்துவமான வழியில் வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக டிஜிட்டல் மாற்றத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றன. பாவனைக்கு இலகுவான, மற்றும் தொழிற்துறை தொடர்பில் பாதுகாப்பான தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை மூலோபாயம்மிக்க வழியில் பிரயோகிப்பதன் மூலமாக, இந்த வர்த்தக நிறுவனங்கள் இன்னும் அதிக அளவில் சுறுசுறுப்பும், திறனும், மேம்பாடும் கொண்டவையாக மாறுகின்றன.” என்று VMware இன் அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகள் மற்றும் வியட்னாம் ஆகியவற்றிற்கான பொது முகாமையாளரான ஏட்ரியன் ஹியா குறிப்பிட்டார். “VMware ஆனது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் புத்தாக்கத்தையும், வளர்ச்சியையும் விரைவுபடுத்துவதற்குத் தேவையான ஆற்றல்களை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வளங்களை உள்ளெடுக்கும் வகையில் அவற்றுடன் ஒத்துழைத்து செயற்படுவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

நவீனமயப்படுத்தப்பட்ட தரவு மையங்கள் (data center)

மெய்நிகராக்க (virtualization)தொழில்நுட்பங்களின் மூலமாக மகத்தான நெகிழ்வுப்போக்கு, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்காக நிறுவனங்கள் தமது தரவு மையங்களை நவீனமயப்படுத்த VMware உதவுவதுடன், அது புதிய சந்தைகளில் வியாபாரத் தொழிற்பாடுகளை விரைவாக விஸ்தரித்தல் போன்ற வெளிப்படையான வியாபாரப் பெறுபேறுகளை முன்னெடுக்க உதவுகின்றது. 

வாடிக்கையாளார்களுக்கு நவீன பயன்பாடுகள் (application)மற்றும் சேவைகளை அபிவிருத்தி செய்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ள நிறுவனங்கள்,  VMware Cross-Cloud Architecture™ மூலமாக பொது cloud களுக்கு தமது தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை இலகுவாக நீட்டித்து, கலப்பு முறை cloud (hybrid) சூழல்களை நிர்வகிக்க முடியும்.

Lanka ORIX Leasing Company (LOLC) நிறுவனத்தின் தொழில்நுட்ப வியாபாரமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையளிப்பதற்காக அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக விஸ்தரிப்படைந்துள்ளது. அதற்கு குறைந்தபட்ச செலவில் மாற்றம் கண்டு வருகின்ற வாடிக்கையாளர்களின் தேவைகளை ஈடு செய்வதற்கு புதிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தீர்வுகளை விரைவாக முன்னெடுக்க வேண்டிய திறன் நிறுவனத்திற்குத் தேவைப்பட்டதாக அது கூறியுள்ளது. மிக விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற தனது பயனர் தளத்தின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை ஈடுசெய்வதற்கு இடமளிப்பதற்கு தனது server வளப் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்கு VMware இன் மெய்நிகராக்க தொழில்நுட்பத்தை நிறுவனம் உள்வாங்கியிருந்தது. தனது தனிப்பட்ட cloud இற்கு இணையாக கலப்பு முறை cloud மற்றும் cloud bursting application deployment வடிவங்களை அது உள்வாங்கிக் கொண்டு, அதன் மூலமாக அதியுச்ச கேள்விச் சக்கரம் நிலவும் சமயங்களில் புதிய சேவைத் தெரிவுகள் மற்றும் நெகிழ்வுப்போக்குடைய தகவல் தொழில்நுட்ப வள ஒதுக்கீட்டினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

நிறுவனமொன்று சந்தையில் புதிய சேவைகளை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கு, எவ்வாறு நவீன தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட DevOps சூழல் இடமளிக்க முடியும் என்பதற்கு பார்தி எயார்டெல் நிறுவனம் மற்றுமொரு சிறந்த உதாரணமாகும். அதன் மரபுரீதியான உட்கட்டமைப்பானது வலையமைப்பு பயன்பாட்டினை 25 சதவீதத்தால் மட்டுப்படுத்துகின்றது என்பதை நிறுவனம் உணர்ந்து கொண்ட சமயத்தில் , சுறுசுறுப்பான, நெகிழ்வுப்போக்குடைய மற்றும் பாதுகாப்பான தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்காக VMware இன் மெய்நிகராக்கம், தன்னியக்கமயமாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் தீர்வுகளை உள்வாங்கிக்கொள்வதற்கு தீர்மானித்ததாக குறிப்பிட்டுள்ளது.

VMware vSAN™ மற்றும் VMware vSphere® போன்ற VMware தீர்வுகள் துரிதமாக முன்னெடுத்தல், இலகுபடுத்தப்பட்ட மேலாண்மை மற்றும் கிடையாகவும், நிலைக்குத்தாகவும் மேம்படுத்தும் திறன் ஆகியவற்றிற்கு இடமளிக்கின்றன. இதற்கிடையில் vRealize® Automation™ மற்றும் VMware NSX® ஆகியன நிறுவனங்கள் தமது தகவல் தொழில்நுட்ப நடைமுறைகளை தன்னியக்கமயமாக்க உதவுவதுடன், அதன் மூலமாக அவை உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகளை துரிதமாகக் கட்டமைத்து, வழங்கி, முன்னெடுத்து, சோதித்து, மேம்படுத்தி மற்றும் நீக்கம் செய்வதற்கு உதவுகின்றன. நவீன பயன்பாடுகள் மற்றும் சேவைகளை தொழிற்படுத்தியுள்ள நிறுவனங்களுக்கு VMware Photon™ ஆனது பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை விநியோகிக்க தகவல் தொழில்நுட்பத்திற்கும் இடமளிக்கும் சுறுசுறுப்பான, நெகிழ்வுப்போக்குடைய உட்கட்டமைப்பை வழங்குகின்றது.

டிஜிட்டல் பணியிடத்தை வலுவூட்டுதல் 2013 ஆம் ஆண்டில் தெற்காசியாவிலேயே முதன்முதலாக 4G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருந்த நாடு என்ற வகையிலும், 2016 ஆம் ஆண்டில் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 123 சதவீதத்தால் வளர்ச்சிகண்டுள்ளமையாலும்  வலையமைப்பு தயார்நிலைச் சுட்டெண்ணில் (Network Readiness Index) 2 தெற்காசியாவில் முதலிடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

மொபைல் தொலைபேசி அடைவுமட்டமானது மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதால்ரூபவ் இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு தரவு மையத்திலிருந்து, desktop மற்றும் சாதனம் வரை பாதுகாப்பான தொழில்முறை பணிச்சூழலை வழங்குவதற்கு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகின்றது. இத்தேவையை ஈடுசெய்யும் வகையில், ஏஆறயசந

இன் டிஜிட்டல் பணியிட புத்தாக்கங்கள்ரூபவ் ஊழியர்களுக்கு எந்நேரத்திலும், எச்சாதனத்தின் மூலமாகவும் தேவைப்படுகின்ற முக்கியமான வியாபார தகவல்களையும், பயன்பாடுகளையும் விநியோகிக்கின்றது.

மிகவுயர் மட்டத்தில் ஒழுக்காற்று விதிகளைக் கொண்ட ஒரு துறையில் முறையான பாதுகாப்பு தேவைப்பாடுகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டியுள்ளதுடன், மரபுரீதியான உட்கட்டமைப்பையும் கொண்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், தனது மென்பொருள் மற்றும் சொத்து கட்டமைப்புக்களை மத்தியில் மேலாண்மை செய்து, தரவு மையத்திலிருந்து desktop முதல் மொபைல் சாதனங்களை வரை பாதுகாப்பினை வழங்கி, தேசிய விமான சேவை தனது desktop சூழலை மெய்நிகராக்கம் செய்வதற்கு VMware Horizon® இனை உள்வாங்கியிருந்தது. இதன் மூலமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஊழியர்கள் எங்கிருந்தும், எந்நேரமும், பல்வேறுபட்ட சாதனங்களின் மூலமாக ஒன்றுபட்டரீதியில் தமது பணிகளை முன்னெடுப்பதற்கு இடம் கிட்டியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு உண்மையான வியாபார முன்னெடுப்பிற்கு வலுவூட்டியுள்ளதுடன், உற்பத்தித்திறன் மற்றும் பாதுகாப்பினை அதிகரித்துரூபவ் ஈற்றில் வாடிக்கையாளர் சேவை மற்றும் அனுபவங்களையும் மேம்படுத்தியுள்ளது.

VMware Workspace ONE ™ மற்றும் VMware Horizon® ஆகியவற்றின் மூலமாக அடையாளப்படுத்தல் மேலாண்மை, சாதன மேலாண்மை மற்றும் பயன்பாட்டு விநியோகம் ஆகியவற்றை தனியான ஒரு தளமேடையில் ஒருங்கிணைக்க VMware இனால் முடிந்துள்ளதுடன், வியாபாரம் தொடர்பான மிக முக்கியமான தகவல்களை ஊழியர்கள் எந்த தளமேடையிலும், எந்த இடத்திலும், எச்சாதனத்திலும் அல்லது எந்த பயன்பாட்டின் மூலமாகவும் இலகுவாக அடைந்துகொள்வதற்கு நிறுவனங்களுக்கு இடமளிக்கின்றது. VMware இன் மென்பொருள் வடிவமைப்பிலான தீர்வுகள் பாரம்பரிய மற்றும் cloud சார்ந்த பயன்பாடுகள் ஆகிய இரு பிரிவிலும் பலப்படுத்தப்பட்ட மேலாண்மையை வழங்குவதுடன், பயன்பாடுகள் மற்றும் தரவு ஆகியவற்றை உபயோகித்து வர்த்தக நிறுவனங்கள் புதுப்பித்து, புதுமைகளை புகுத்தி, வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கு முடியும்.

பொது cloud களை ஒருங்கிணைத்தல் (public cloud)

இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் தமது வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு பொது cloud களை ஒருங்கிணைப்பதால் கிடைக்கும் பயன்களை உணர ஆரம்பித்துள்ளன. வளங்களை மெய்நிகராக்கம் செய்தல், நடைமுறைகளை தன்னியக்கமயமாக்கல் மற்றும் பணிகளை தரநியமப்படுத்தல் ஆகியவற்றின் மூலமாக குறிப்பாக நிதியியல் சேவை வழங்கல் நிறுவனங்கள் மற்றும் தொலைதொடர்பு சேவை தொழிற்பாட்டாளர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஈடுசெய்து, சேவையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புத்தாக்கத்தை விரைவுபடுத்திக்கொள்ள முடியும்.

உலகின் மிகப் பாரிய ஹோட்டல் நிறுவனமான Marriott International இற்கு மாறுபடும் சனத்தொகை புள்ளி விபரங்கள் மற்றும் அவர்கள் விருந்தோம்பல் சேவைகளை எவ்வாறு பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர்

என்பதற்கு பதில் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நிறுவனம் தனது டிஜிட்டல் மாற்றத்திற்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக பொது cloud களை வெற்றிகரமாக ஒருங்கிணைப்புச் செய்திருந்தது. அதன் விளைவாக, இளம் தலைமுறை பிரயாணிகளின் தேவைகளை ஈடுசெய்யும் புதிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தி, தனது வருமானத்தை அதிகரிக்க முடிந்துள்ளதாக கூறியுள்ளது.

கலப்பு cloud கள் நிறுவனத்தின் தரவு மையத்தை எந்தவொரு பொது cloud சேவை அல்லது தெரிவாக நீட்டித்து சுறுசுறுப்பு, மேம்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. இதன் விளைவாக, அலுவலக வளாகத்திலுள்ள தீர்வுகள் அல்லது மென்பொருளை ஒரு சேவையாகக் கொள்ளும் (SaaS) அடிப்படையிலான சேவைகளை தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட cloud கள் மூலமாக நிறுவனங்கள் நிர்வகிக்க முடியும்.

பாதுகாப்பு மாற்றம்

தரவு மீறல்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் மெய்நிகர் அத்திவாரமொன்றைக் கட்டியெழுப்பி, உள்ளார்ந்த, மிகுந்த நெகிழ்வுப்போக்குடைய மற்றும் கொள்கை அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற புதிய பாதுகாப்பு கட்டமைப்பொன்றை அபிவிருத்தி செய்வதற்கு ஏதுவாக, தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு VMware உதவுகின்றது.

London Capital Group இற்கு புதிய நிதியியல் வர்த்தகத் தளமொன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட சமயத்தில் தனது பாதுகாப்பினை மேம்படுத்தி, அதன் சர்வதேச இணைய வர்த்தக தளமேடையை மீள்எழுச்சிப்படுத்துவதற்கு அது VMware இன் மென்பொருள்-வரையறை கொண்ட அணுகுமுறையை நாடியது. VMware இன் நுண்-பகுதியாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப தன்னியக்க மயமாக்க ஆற்றல்களின் அனுகூலத்தைக் கொண்டிருப்பதால், நிதியியல் சேவைகள் வழங்கல் நிறுவனம் தற்போது தொழிற்துறையின் இணக்கப்பாட்டிற்குரிய மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களுக்கு அமைவாக சேவைகளை வழங்க முடிகின்றது. இது தரவு மையத்தின் இட வெளியை குறைக்க உதவியுள்ளதுடன், அதனை இயக்குவதற்கு ஏற்படும் செலவையும் 50 சதவீதத்தால் குறைக்க முடிந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே,  Prague Stock Exchange தனது தரவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு VMware இன் மென்பொருள்-வரையறை கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றியிருந்தது. ஆனாலும், முடிவுப் பாவனையாளர்கள் அதனை அடைந்துகொள்ளும் வசதி மற்றும் சௌகரியம் ஆகியவற்றில் எவ்விதமான குறைவுமின்றி அதனை மேற்கொண்டிருந்தது. வன்பொருள் தேவைப்பாடுகளை குறைப்பதற்குப் புறம்பாக, சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நோக்கிய நகர்வுகளை தன்னியக்க அடிப்படையில் கட்டுப்படுத்தி, அதன் விளைவாக வர்த்தகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்கும் வகையில், பாதுகாப்பினை மேம்படுத்த VMware தொழில்நுட்பம் உதவியுள்ளதாக Exchange குறிப்பிட்டுள்ளது.

VMware NSX® ஆனது நுண்-பகுதியாக்கத்தை உபயோகிப்பதுடன், வலையமைப்பின் ஒரு பாகம் பாதிப்பிற்கு முகங்கொடுக்க நேரிடுமிடத்தில் அதன் பண்புக்கூறுகளை விரைவாகவும், தன்னியக்க அடிப்படையிலும் மேம்படுத்தவோ அல்லது நீக்கவோ செய்வதுடன், சைபர் ஆபத்து பக்கவாட்டாக நகர்ந்து, அதிகமான சேதத்தை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. VMware AirWatch® இனை உபயோகிப்பதால் நிறுவனங்கள் முழுமையாக காணும் நிலையைப் பெற்றுரூபவ் பயனர் அனுபவத்தைப் பாதிக்காது தரவு மையத்திலிருந்து, முடிவு முனை வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். VMware NSX® மற்றும் VMware vSphere® ஆகியன ஒழுக்காற்றுப்படுத்தப்பட்ட வர்த்தகச்சூழல்களில் இணக்கப்பாட்டை சீரமைத்து எளிமைப்படுத்தும் வகையில் எங்கும் வியாபித்துள்ள மென்பொருள் அடுக்கினை வழங்குகின்றன.

“தகவல் தொழில்நுட்பத்தில் மென்பொருள்-வரையறை கொண்ட அணுகுமுறையை உள்வாங்கியுள்ள முற்போக்காக சிந்திக்கத் தலைப்படும் நிறுவனங்கள் ஏற்கனவே புதிய வாய்ப்புக்களையும், உண்மையான வர்த்தகப் பயன்களையும் அடையப் பெற்றுள்ளன. உரிமையாண்மைக்கான செலவை உச்சப்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை விடுத்து, வர்த்தக புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு அவை உந்துசக்தி அளிக்கின்றன. கணித்தல், வலையமைப்பு, தேக்ககம், cloud மற்றும் சாதனங்கள் என அனைத்து மட்டங்களிலும் வியாபித்துள்ள தனித்துவமான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புத் திட்டத்தை அமுலாக்கம் செய்வதன் மூலமாக, டிஜிட்டல் யுகத்தில் உண்மையான வெற்றியைக் காண்பதற்குத் தேவைப்படுகின்ற மேம்பாடு, சுறுசுறுப்பு மற்றும் பாதுகாப்பினை பெற்று அதன் மூலமாக நிறுவனங்கள் வலுவூட்டப்படுகின்றன” என்று ஹியா  குறிப்பிட்டார்.