பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து மின்­சார சபை ஊழி­யர்கள் மேற்­கொண்­டுள்ள தொழிற்­சங்க நட­வ­டிக்கை ஏழா­வது நாளாக இன்றும் தொடர்­கி­றது. மேலும் குறித்த தொழிற்­சங்கப் போராட்­டத்தில் தொழில்­நுட்ப பொறி­யி­ய­லாளர் சங்கம், மின் அத்­தி­யட்­சகர் சங்கம் என்­ப­னவும் நேற்று நள்­ளி­ரவு முதல் இணைந்­து­கொண்­டுள்­ளன. 

இதே­வேளை தேசிய சேவை சங்­கத்தின் பிர­தி­நி­திகள் தமது கோரிக்­கைகள் தொடர்பில் அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கவை நேற்று அலரி மாளி­கையில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். அத்­துடன் தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்­சர் ஜோன் சென­வி­ர­த்ன விற்கும் தொழிற்­சங்கப் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நேற்று நடை­பெற்ற பேச்­சு­வார்­த­்தையும் தோல்­வி­ய­டைந்­துள்­ளது.

மேலும் மின்­சார சபை ஊழி­யர்கள் மேற்­கொண்­டுள்ள தொழிற்­சங்கப் போராட்­டத்­தினால் பல பிர­தே­சங்­களில் மின்­துண்­டிப்பு இடம்­பெற்­றுள்­ளது. இதனால் அப்­பி­ர­தேச மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. சில பிர­தே­சங்­களில் மின்­சா­ரத்தைத் துண்­டிக்கும் வகையில் சிலர் மோசடி  நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்­டுள்­ளனர்.

எனவே மின்­பி­றப்­பாக்­கி­க­ளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு நடவடிக்கை எடுத் துள்ளமை குறிப்பிடத்தக்கது.