மின்சார சேவை தொழிற்சங்கத்திற்கும் தொழில்துறை அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்னவிற்குமிடையில் நேற்றுமாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

குறித்த பேச்சுவார்த்தையில் தம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை அதிகாரிகள் வழங்கவில்லை என்று இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எழுத்துமூல தீர்வு வழங்கும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.