இலங்கை மதுவரி திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளராகத் ஹெலன் மீகஸ்முல்ல தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

நுவரெலியா மாவட்ட செயலாளராக பதவி வகித்த  ஹெலன் மீகஸ்முல்லவை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவர் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.