மன்னார் செபஸ்தியார் பேராலய பிரதான வீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தகத்தில் நேற்று  இரவு ஏற்பட்ட திடீர் தீ அனர்த்தத்தின் காரணமாக குறித்த முச்சக்கர வண்டி திருத்தகம் முழுமையாக எரிந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார்  தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் எனினும் குறித்த முச்சக்கர வண்டி திருத்தகம் முழுமையாக எரிந்துள்ளது.

இதன் போது குறித்த திருத்தகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் எறிந்துள்ளதோடு, திருத்தகத்தில் காணப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களும் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திருத்தகத்தில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.