ஏழு நாட்கள் வய­து­ கொண்ட சிசு  அயல் வீட்டு நாய் கடித்­ததில் உயி­ரி­ழந்த சம்பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது. ஹப­ரணை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாமல்­புர, ஆசி­ரி­கம எனும் இடத்தில் இந்த சம்­பவம் நேற்று முன்தினம் இரவு  இடம்­பெற்­றுள்­ளது. நாயின் கடியால் தலையில் பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளாகியுள்ள மேற்­படி சிசு வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்பட்­டுள்ள போதும் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய வரு­வ­தா­வது,

நாமல்­புர - ஆசி­ரி­க­மவைச் சேர்ந்த 24 வய­தான தாய் ஒருவர் தனது மூன்­றா­வது சிசுவை நேற்று முன்தினம் இரவு உறங்க வைத்­துள்ளார். 6, 2 வயது நிரம்­பிய இரு மகள்மார் அந்த தாய்க்கு ஏற்­க­னவே உள்ள நிலையில் மூன்­றா­வது பிள்­ளை­யான குறித்த சிசுவை உறங்கச் செய்து, வீட்டின் நிலத்தில் விரிப்­பொன்றில் உறங்க வச­தி­களைச் செய்­துள்ளார்.

பின்னர் சிசுவை நுளம்­பிடம் இருந்து பாது­காக்க நுளம்பு வலை­யையும் விரித்­துள்ள அந்த இளம் தாய், பின்னர் இரவு நேர உணவு தயா­ரிக்கும் பணி­களில் ஈடு­பட்­டுள்ளார். இதன்­போது வீட்­டுக்குள் வந்­துள்ள அயல் வீட்டில் உள்ள நாய், சிசுவை கடித்து குத­றி­யுள்­ளது.

உட­ன­டி­யாக சிசுவின் அழு குரல் கேட்டு தாய் ஓடி வந்­துள்ள போது, நாய் சிசுவை கவ்­வு­வதை கண்டு உட­ன­டி­யாக அத­னி­ட­மி­ருந்து சிசுவை மீட்டு வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றுள்ளார்.

ஹப­ரணை வைத்­தி­ய­சா­லையில் சிசுவை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள், தலையில் பலத்த காயம் காணப்­பட்­டதால் உட­ன­டி­யாக சிசுவை  தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றியுள்ளனர்.

எனினும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.