தொடரும் சீரற்ற கால­நி­லை ­கா­ர­ண­மாக நாட்டில் டெங்கு நோயா­ளர்­களின் தொகை பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 51 ஆயி­ரத்து 975 பேர் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் 370 க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

Image result for டெங்கு காய்ச்சல் தீவிரம் virakesari

சுகா­தார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்­டுள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது,

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த இரு­வார கால­மாக நாட்டில் தொடரும் சீரற்ற கால­நி­லை ­கா­ர­ண­மாக அதி­க­ள­வான டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 51 ஆயி­ரத்து 975 பேர் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் 360 க்கும் மேற்­பட்டோர் இந்­நோயினால் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்­தி­லேயே அதி­க­ள­வான டெங்கு நோயா­ளர்கள் பதி­வா­கி­யுள்­ளனர். அதன்­படி அங்கு 30 ஆயி­ரத்து 98 பேர் டெங்கு நோயினால் பீடிக்­கப்­பட்­டுள்­ளனர். கம்­பஹா மாவட்­டத்தில் 27 ஆயி­ரத்து 53 பேரும் களுத்­துறை மாவட்­டத்தில் 8928 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கண்டி மாவட்­டத்தில் 10 ஆயி­ரத்து 685 பேரும், மாத்­தறை மாவட்­டத்தில் 5536 பேரும், மட்­ட­க்க­ளப்பு மாவட்­டத்தில் 4553 பேரும், திரு­கோ­ண­ம­லையில் 4594 பேரும், இரத்­தி­ன­பு­ரியில் 9817 பேரும் அதி­க­ளவில் டெங்கு நோயா­ளர்­க­ளாக மாவட்ட மட்­டத்தில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். 

இதே­வேளை நாட­ளா­விய ரீதியில் டெங்கு நோயினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான விசேட வேலைத்­திட்டம் சுகா­தார அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதன்­மூலம் சகல பாட­சா­லை­க­ளுக்கும் இது தொடர்பில் அதி­பர்­க­ளி­னூ­டாக மாண­வர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வூட்­டு­வ­தற்கும், பாட­சாலை வளா­கங்­களில் டெங்கு நோய் பரவும் வகை­யி­லான கார­ணி­களை அகற்­று­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் டெங்கு நோய் பரவும் வகையில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் சூழலை வைத்­தி­ருப்­போ­ருக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் சகல பிர­தேச மட்­டத்­திலும் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லையில் மக்­களும் தங்­க­ளது சுற்­றுப்­பு­றச்­சூ­ழலை சுத்தமாக வைத்தி­ருப்பதுடன் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ச்சியான காய்ச்சல் அல்லது டெங்கு நோய் தொடர்பிலான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடி­யாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்­கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்­காட்டப்பட்டுள்ளது.